முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்டத்தில் சாதனை புரிந்தமாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.- 5 - மதுரை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பாராட்டி பரிசுகள் வழங்கினார். மதுரை மாவட்ட அளவில் 494 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்த மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள் எஸ்.மோகன பிரியங்கா, வி.சரண்யா, டி.வி.எஸ். மெட்ரிக் மேலநிலைப்பள்ளியின் மாணவி எச்.நீரஜா, 493  மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.பிரீதி, மேலூர் ஸ்ரீசுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி மாணவி வி.ஹேமலதா, லட்சுமிபுரம் டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜே.சார்லஸ், 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்த  மகாத்மா  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவி கே.காருண்யா, சி.இ.ஓ.ஏ. மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.ஏ.அபிஷேக் ஆகியோரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அன்சுல்மிஸ்ரா பாராட்டி புத்தகங்களையும், நினைவுப்பரிசுகளையும் வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 91.01 மூ தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் மதுரை மாவட்டம் 8வது இடத்தை பெற்றுள்ளது. 100 சதவீதம் தேர்ச்சிபெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 119ஆக இருந்தது. இவ்வாண்டு 155ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாடங்களில் 100 சதவீதம் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 914ல் இருந்து 968 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்மொழி பயின்று 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் இடம் பெற்றவர்கள் 3 பேர். 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றவர்கள் 3 பேர். 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றவர்கள் 2 பேர் ஆவர். 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 3,644 பேர். 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 11,251 பேர். 60 சதவீத்திற்கும் மேல் பெற்றவர்கள் 27,888 பேர்.தேர்வில் தோல்வியுற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்காக நடைபெறும் உடனடித் தேர்வை நன்றாக எழுதுவதற்கு சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் நாகராஜமுருகன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆர்.லோகநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஞானகெளரி மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்