முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்இந்தியா பைலட்களுக்கு கதவுமூடப்பட்டது நீக்கப்பட்டவர்கள் சேரவேண்டும்

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.- 7 - போராட்டம் நடத்தி வரும் ஏர் இந்திய பைலட்களுக்கு கதவு மூடப்பட்டுவிட்டது என்றும் நீக்கப்பட்ட பைலட்கள் சேர வேண்டும் என்றால் அவர்கள் புதியதாகத்தான் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அஜித் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.  குறிப்பிட்ட காலத்திற்குள் பதவி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா பைலட்கள் ஏறக்குறைய கடந்த ஒரு மாத காலமாக ஸ்டிரைக் செய்து வருகிறார்கள். ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பைலட்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசினார். பைலட்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தார். அப்படி இருந்தும் பைலட்கள் பணிக்கு திரும்ப மறுத்து வருகின்றனர். இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையொட்டி ஏர் இந்திய பைலட்களுக்கு கதவு மூடப்பட்டுவிட்டது என்றும் வேலையில் இருந்து நீக்கப்பட்ட பைலட்கள் மீண்டும் பணிக்கு வர விரும்பினால் அவர்கள் புதியதாக விண்ணப்பம் செய்துதான் வரமுடியும் என்று அமைச்சர் அஜீத் சிங் தெரிவித்துள்ளார்.  எங்களை பொறுத்த வரை ஸ்டிரைக் முடிந்துவிட்டது. தர்மதிகாரி அறிக்கையை பைலட்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் நீக்கம் செய்யப்பட்ட பைலட்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை என்று அஜீத் சிங் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பைலட்களின் ஸ்டிரைக் சட்டவிரோதமானது என்பதுதான் எங்கள் நிலை. பைலட்களின் ஸடிரைக் சட்ட விரோதமானது என்று டெல்லி ஐகோர்ட்டும் தீர்ப்பு அளித்துள்ளது. ஸ்டிரைக் செய்ய அவர்கள் முன்கூட்டியே நோட்டீஸ் எதுவும் கொடுக்கவில்லை என்று அமைச்சர் அஜீத் சிங் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்