முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய இளைஞர் கொள்கை வரைவு ஆலோசனைக் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.16 - இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பாக தேசிய இளைஞர் கொள்கை வரைவு 2012 -க்கான மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை நேரு வெளிப்புற ஸ்டேடியம் ஹாலில் நடைபெற்றது. தேசிய இளைஞர் கொள்கையின் முக்கிய நோக்கம் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாடு சமூக அர்ப்பணிப்பு ஊக்கப்படுத்துவது தேசப்பற்று, பண்பாடு மேம்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்கள் மூலம் நாட்டின் முழுமையான வளர்ச்சியை கொண்டு வருவது ஆகும். தன்னார்வ தொண்டு செய்ய இளைஞர்களுக்கு பயிற்சியளித்தல் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களை அறிவியல் ரீதியாக ஊக்கு விப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய இளைஞர் கொள்கை 2012 வழிவகுக்கும்.

மேலும் இந்தக் கொள்கைப்படி முக்கிய இளைஞர் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளது. புலம் பெயர் இளைஞர்கள், நகர் மற்றும் கிராமப்புற இளைஞர், பழங்குடி இளைஞர், மாணவர், பள்ளி இடைநிற்றல் இளைஞர் போன்ற பல்வேறு இளைஞர் குழுக்களுடன் தேசிய இளைஞர் கொள்கை 2012 வரைவு மூன்று குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றது. அவை இளம் பெண்கள், சமூக மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்த இளைஞர் மற்றும் மாற்றுத்திறனுள்ள இளைஞர்கள் ஆவார்கள். 

மேலும் 2012 -ம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் கொள்கை , 2021 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உருவாக்கப்பட்ட தரவு தொகுப்புக்கு பிறகு 2022 ல் இந்த வரைவு மறு ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் மூலம் இளைஞர் மேம்பாடு அட்டவனை தயாரித்து திட்டங்கள் உருவாக்குவதற்காக இவை பயன்படும். கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் தங்கள் கருத்துகளை ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர்.

கூட்டத்தில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சக செயலாளர் நீதா சவுத்ரி, தமிழ்நாடு இளைஞர் நலம் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜி.ஏ.ராஜ்குமார், கர்நாடக அரசின் முதன்மைச் செயலர் பெருமாள் மற்றும் தென்பிராந்திய என்.எஸ்.எஸ்.மற்றும் நேருயுவகேந்திரா அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

படவிளக்கம்:

தேசிய இளைஞர் கொள்கை வரைவு - 2012 க்கான மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை நேரு வெளிப்புற ஸ்டேடிய ஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சக செயலாளர் நீதா செளத்ரி மற்றும் துறையின் தமிழ்நாடு செயலர்  ஜி.ஏ.ராஜ்குமார், கர்நாடக முதன்மைச் செயலர் ஐ.ஆர்.பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்