முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய கால்பந்து: ஸ்பெயின் அபார வெற்றி

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

டான்ஸ்க், (போலந்து), ஜூன். 16 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ  ட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி அபார வெற் றி பெற்றது. இதனால் அயர்லாந்து அணி வெளியேறியது. யூரோ கோப்பை கால்பந்து போட்டி யை போலந்து மற்றும் உக்ரைன் நாடு கள் இணைந்து நடத்தி வருகின்றன. இந்தப் போட்டி கடந்த சில நாட்களாக அமோகமாக நடந்து வருகிறது. 

இதில் கோப்பையைக் கைப்பற்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முன்ன ணி அணிகள் களத்தில் குதித்து உள்ளன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப் பான கட்டத்தை அடைந்து உள்ளது. 

இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் முன்னணி நாடுகளைச் சேர்ந்த நட்சத்தி ர வீரர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

போலந்து நாட்டின் முக்கிய நகரமான டான்ஸ்க் நகரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினும், அயர்லாந்து அணியும் மோதின. 

இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் அந்த அணி 4 - 0 என்ற கோல் கணக்கில் வெ ற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் ஸ்பெயின் வீரர்க ள் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செ லுத்தினர். அந்த அணியின்  முன்னணி வீரர் பெர்னாண்டோ டாரஸ் அபார மாக ஆடி 2 கோல்கள் போட்டார். 

அயர்லாந்து வீரர்கள் பதில் கோல் போட்டு சமன் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் எதி ர்த்து ஒரு கோல் கூட போட முடியவி ல்லை. ஆட்டத்தின் முடிவில் 4 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அபார வெற்றி பெற்றது. 

இது ஸ்பெயின் பெற்ற முதலாவது வெ ற்றியாகும். ஏற்கனவே ஸ்பெயின் இத் தாலியுடன் மோதிய போட்டி 1- 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது, 

அயர்லாந்து அணி ஏற்கனவே முதல் போட்டியில் குரோசியாவிடம் தோற்றது. நேற்றைய போட்டியிலும் தோல் வி அடைந்ததால் போட்டியில் இருந்து வெளியேறியது. 

ஸ்பெயின் அணி இந்த வெற்றியின் மூலம் சி பிரிவில், 4 புள்ளிகளுடன் முத லிடத்தைப் பிடித்தது. குரோசிய அணி 4 புள்ளிகளுடன் 2 -வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்ற போதிலும், கோல்கள் அடிப்ப டையில் ஸ்பெயின் முதல் இடத்தைப் பிடித்தது. 

முன்னாள் உலக சாம்பியனான இத்தா லி அணி 2 புள்ளிகள் பெற்று 3-வது இட த்தில் உள்ளது. அயர்லாந்து அணி 2 ஆட்டத்திலும் தோற்றதால் போட்டி யில் இருந்து வெளியேற்றப்பட்டது. 

போஸ்னன் நகரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சி பிரிவைச் சேர்ந்த இத்தா லி மற்றும் குரோசியா அணிகள் மோ தின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. ஆட்டத்தின் இறுதி வரை மேற்கொண்டு கோல்கள் எதுவு ம் விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. சி பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் ஸ்பெயின் - குரோசியா அணிகளும், இத்தாலி - அயர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்