முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டி ஆறுமுகத்திற்கு 29-ந் தேதி வரை காவல் நீடிப்பு

சனிக்கிழமை, 16 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூன்.17 - சேலம் அங்கம்மாள் காலனி நில பிரச்சனையில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற் வரும் 29 ந் தேதி வரை காவல் நீடிப்பு செய்து சேலம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சேலம் புதிய பஸ்நிலையம் அங்கம்மாள் காலனி பகுதியில் வசித்து வந்த மக்களின் குடிசை வீடுகளுக்கு தீ வைத்து,குடிசை வீடுகளை சூறையாடிய சம்பவத்தில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 25 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சேலம் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து அவர் சென்னை ஐ கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணையை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

இந்த நிலையில் கோர்ட்டில் வீரபாண்டி ஆறுமுகத்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த பள்ளப்பட்டி போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று 

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை வேலூரில் இருந்து போலீசார் அழைத்து வந்து மதியம் 12.30 மணியளவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் நீதிபதி லட்சுமி முன்பு ஆஜர்படுத்தினர்.நீதிபதி லட்சுமி மனுமீதான விசாரணையை மதியம் தள்ளி வைத்தார். இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் வேனில் அமர வைத்தனர். 

மீண்டும் 2.30 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தும் மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி லட்சுமி போலீசார் மனுவை தள்ளுபடி செய்து வீரபாண்டி ஆறுமுகத்தை வரும் 29 ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் ஆயுதப்படை போலீசாரால் மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். வீரபாண்டி ஆறுமுகத்தை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தியதால் கோர்ட் மற்றும் கோட்டிற்கு வெளியே ஏராளமான தி.மு.க.வினர் குவிந்தனர். ஏதேனும் அசம்பாவிதங்கள்  நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!