முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனிஅரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதல் பிரசவத்தில் 3 குழந்தைகள்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

ஆண்டிபட்டி ஜூன் - 15 - பெரியகுளத்தை சேர்ந்த பெண்ணுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதல் பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக டீன் மதிவாணன் தெரிவித்தார். தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் வீராச்சாமி கூலித்தொழிலாளி. இவருக்கும் செல்லம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் செல்லம்மாள் கருவுற்று பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் சாந்தாவிபலா பிரசவம் பார்த்தார். செல்லம்மாளுக்கு முதல் பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் சுகப்பிரசவத்தில் பிறந்தது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு கிலோ 700 கிராம் இருந்தது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதாகவும் டீன் மதிவாணன் தெரிவித்தார். செல்லம்மாளுக்கு முதல் பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்ததையடுத்து கணவரும், உறவினர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!