முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 முத்தரப்பு தொடர்: ஜிம்பாப்வே வெற்றி

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஹராரே, ஜூன். 22 - ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு டி - 20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 29 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி தரப்பில், துவக்க வீரராக இறங்கி ய சிபாண்டா மற்றும் மசகட்ஜா இருவ ரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித் து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்த னர். அவர்களுக்கு பக்கபலமாக கேப்ட ன் டெய்லர் ஆடினார். 

பின்பு பெளலிங்கின் போது, போபு மற்றும் கிரமர் இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட் எடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக முசாங்கே, ஜார்விஸ் மற்றும் உத்செயா ஆகியோர் பந்து வீசினர். 

ஜிம்பாப்வேயில் டி - 20 முத்தரப்பு தொடர் நடந்து வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வங் கதேசம் ஆகிய 3 நாடுகள் கலந்து கொ ள்கின்றன. 

டி - 20 தொடரில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நேற்று நடைபெற்ற லீக்கில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப் வே ஆகிய அணிகள் மோதின. 

இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம் பாப்வே அணி நன்றாக பேட்டிங் செய்து ரன்னைக் குவித்தது. அந்த அணி இறு தியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்னைக் குவித்தது. 

துவக்க வீரர் சிபாண்டா அபாரமாக ஆடி 50 பந்தில் 58 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். மசகட்ஜா 39 பந்தில் 55 ரன் னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம்.  தவிர கேப்டன் டெய்லர் 21 பந்தில் 38 ரன்னை எடுத்தா ர். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். 

தென் ஆப்பிரிக்கா சார்பில், பர்னெல் 33 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, பீட்டர்சன் மற்றும் டி லா ங்கே ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத் தனர். 

தென் ஆப்பிரிக்கா அணி 177 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் ஏன்ற இலக்கை ஜிம்பாப்வே அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19. 2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்னை எடுத்தது. 

இதனால் ஜிம்பாப்வே அணி இந்த லீக் ஆட்டத்தில் 29 ரன் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 4 புள்ளிகள் கிடைத்தது. 

தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில், இங் க்ராம் 39 பந்தில் 48 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அட  க்கம். துவக்க வீரர் லெவி 28 பந்தில் 40 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, அம் லா 11 ரன்னையும், பீட்டர்சன் 13 ரன் னையும் எடுத்தனர். 

ஜிம்பாப்வே அணி சார்பில், போபு 20 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட்  எடுத் தார். கிரமர் 29 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, முசாங்கே 2 விக்கெட்டையும், உத்செயா 1 விக்கெ ட்டையும் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்டநாயகனாக போபு தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago