முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்க நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.29 - மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நிரந்தர தீர்வு காண எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்அன்சுல்மிஸ்ரா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு அருகாமையில் எங்கிருந்து எளிதாக தண்ணீரை கொண்டு வரமுடியும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்ட பொழுது, பனையூர் நீர்வரத்துப்பகுதி, அண்ணாநகர் மேம்பாலம் அருகிலுள்ள நீர்வரத்துப்பகுதி, சொட்டதொட்டி நீர்வரத்து பகுதி, மேலக்கால் நீர்வரத்து பகுதி ஆகிய நான்கு இடங்களிலிருந்து ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து தெப்பக்குளத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மற்றும் மாநகராட்சி பொறியாளர் ஆகியோர் கூறினர்.  இதை கேட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த மூன்று பகுதிகளில் எந்தப்பகுதியில் இருந்து தண்ணீர் வருவதற்கு எளிதாக இருக்கும் என்பது குறித்த அறிக்கையும்,  அப்படி கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்த மதிப்பீடும் தயார் செய்து வழங்க வேண்டுமென்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

தெப்பக்குளம் அருகிலுள்ள மண்டபத்தை சுற்றி செப்பனிட்டு பூச்செடிகள் அமைத்து அழகுற பராமரிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  உத்தரவிட்டார்.  தற்போது மையமண்டபத்திலுள்ள கோயில்கள் புனரமைப்பு பணிகள் ரூ.50 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையி;ட்டார்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன், மதுரை வருவாய் கோட்டாட்சியர் துரைராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தனபால், மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சின்னம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், மதுரை தெற்கு வட்டாட்சியர் ஞானகுணாளன், மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்