முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேம்: அமைச்சர் பங்கேற்பு

சனிக்கிழமை, 30 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஆண்டிபட்டி ஜூன் - 29 - பெரியகுளம் அருகில் உள்ள கைலாசநாதர் கோவில் மகாகும்பாபிஷேம் திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று நடைபெற்றது. நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பச்சை கொடியசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கைலாசபட்டியில் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் மிகப்பழமை வாய்ந்த புண்ணிய ஸ்தலம் ஆகும். இக்கோவிலில் பிரதோசம், பவுர்ணமி, மகாசிவராத்திரி, கிரிவலம், சிவவழிபாடு, மகாகார்த்திகை தீபம் மற்றும் பல்வேறு விழா காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் கைலாசநாதர் கோவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு அடுத்தாற்போல் பவுர்ணமி கிரிவலம் சிறப்பு வாய்ந்ததாக பொதுமக்கள் கருதுவதால் இப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் பெற்றுச்செல்வர். பல சிறப்புகளை கொண்ட இக்கோவிலின் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. கொடிமரம் நடப்பட்டு, கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இதனைத்தொடர்ந்து ஆனி 15-ம் நாளான நேற்று கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. கோவில் வாளகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பச்சை கொடியை அசைத்து கும்பாபிஷேக விழாவை தொடங்கி வைத்தார். அப்போது பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் ராஜகோபுரத்தில் சிவச்சாரியார்கள் புனித நீரை கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்ததை நடத்தினர்கள். பக்தர்களுக்கும் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. கைலாசநாதர் அருள் பெற்ற பக்தர்கள் மன மகிழ்ச்சியுடன் இருந்தனர். இவ்விழாவில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ். பழனிச்சாமி டி.ஐ.ஜி. அறிவுசெல்வம், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீண்குமார் அபினவு, அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார், பெரியகுளம் நகர்மன்றத்தலைவர் ஓ. ராஜா, தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் ராமதண்டபாணி, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் டி.ஆர்.என். வரதராஜன், தேனி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆர்.டி. கணேசன், பெரியகுளம் ஒன்றிய பெருந்தலைவர் செல்லமுத்து, ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன், நத்தம் தொகுதி அ.தி.மு.க செயலாளர் கண்ணன், உத்தமபாளையம் சேர்மன் தீபாவளிராஜ், சின்னமனுார் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் முத்துசாமி, அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழு பொறுப்பாளர்கள் ஜெயபிரதீப், சிவக்குமார், ஓதுவார் தெய்வேந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்