முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டாள் பற்றி தவறான தகவல் இடம் பெற்ற கதை நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - ஆண்டாள்   பற்றி தவறான தகவல் இடம்பெற்ற சிறுகதை மனோன்மணியம் பல்கலைக்கழக பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா உத்தரவை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பி.ஏ., பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கான தமிழ் பாடத்திட்டத்தில் டி.செல்வராஜ் என்பவரால் எழுதப்பட்டுள்ள நோன்பு என்னும் சிறுகதைத் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. இந்தப் புத்தகம் 2012-2013-ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

டி.செல்வராஜ் என்பவரால் எழுதப்பட்ட நோன்பு என்னும்  சிறுகதைத் தொகுப்பு நூல் ஆகஸ்ட் 2005-ம் வருடம் வெளியிடப்பட்டது. இதில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பற்றி சிறுகதை இடம் பெற்றுள்ளது. இதில் ஆண்டாள் குறித்து தவறான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன என்ற தகவல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து, தமிழான்றோர்கள் மீதும், தமிழ் வளர்த்த பெரியோர்கள் மீதும் பெருமதிப்பும், மரியாதையும் கொண்டுள்ள முதலமைச்சர் இது பற்றி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், `நோன்பு என்னும் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பு 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. என தெரிய வந்துள்ளது. இந்த பதிப்பில் ஆண்டாள் பற்றிய சிறுகதை இடம் பெறவில்லை.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பி.ஏ., பி.எஸ்.சி., மாணவர்களுக்கான தமிழ்ப்பாடத்தில் நோன்பு என்னும் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாவது பதிப்பே சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பதிப்பில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்த எவ்வித கதையும் இடம் பெறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்