சரிவர பணிசெய்யாத அகிலஇந்திய உழியர்களை நீக்க மத்தியஅரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 2 - சரிவர பணி செய்யாத அகில இந்திய ஊழியர்களுக்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பணியை ஒரு சில அகில இந்திய ஊழியர்கள் தங்களுக்கு சொகுசாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் கடமை தவறுவதோடு நாட்டுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டும் அகில இந்திய பணியில் திறமையையும் உழைப்பையும் அதிகரிக்கும் வகையில் சரியாக செயல்படாத அகில இந்திய ஊழியர்களுக்கு ஓய்வு கொடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பணியில் சேர்ந்து 15 ஆண்டுகளாகும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளின் பணியை மறு ஆய்வு செய்யும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அதிகாரிகள் நலம் மற்றும் பயிற்சி துறையானது மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அதிகாரிகள் 15 அல்லது 25 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தாலோ அல்லது 50 வயதுடையவர்களாக இருந்தாலோ அவர்கள் மூத்த அதிகாரிகள் பதவிக்கு தகுதி உடையவர்கள். அதேசமயத்தில் அவர்களின் பணி சிறப்புமிக்கதாக இருக்க வேண்டும். அகில இந்திய பணி விதிமுறைகளில் (16)3-ல் மத்திய அரசானது கடந்த ஜனவரி மாதம் திருத்தம் செய்தது. அதில் அகில இந்திய பணியில் 30 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தால் அவர்கள் பணியை மறுஆய்வு செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நலன் கருதி அகில இந்திய பணியில் இருப்பவர்கள் 15 ஆண்டுகள் புரிந்திருந்தாலோ அல்லது 25 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தாலோ அல்லது அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவுபெற்றிருந்தாலோ அவர்களின் பணியை ஆய்வு செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: