அடுத்த 5 ஆண்டுகளில் 3 வது ஏவுதளம் அமைக்கிறது இஸ்ரோ

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. - 3 - அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 60 ராக்கெட்டுகளை ஏவுவதற்கு வசதியாக 3 வது ஏவுதளத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது.  எதிர்காலத்தில் அதிகளவிலான ராக்கெட்டுகளை ஏவுவதற்கு போதுமான ஏவுதளம் தேவை. அதனால் 3 வது ஏவுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அடுத்த 24 மாதங்களில் 24 ராக்கெட்டுகளை ஏவுவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதில் தொழில்நுட்ப செயற்கை கோள் மற்றும் மற்ற நாட்டு செயற்கை கோள்களும் அடங்கும்.  அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்பவுள்ள ஜி.எஸ்.எல்.வி. 3 செயற்கை கோளை புதிதாக அமைக்கவுள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிட்டுள்ளோம். தொழில்நுட்ப செயற்கை கோளை தொடர்ந்து சந்திராயன் 2 செயற்கை கோள் சூரியன் மற்றும் சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்கு செயற்கை கோள்களை அனுப்புவதற்கும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த இலக்குகளை எட்டுவதற்கு கூடுதலாக ஏவுதளம் தேவை என்றார். 3 வது ஏவுதளம் அமைக்கும் திட்டம் இப்போது ஆய்வு நிலையில்தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: