முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி? முஷாரப் திடுக்கிடும் தகவல்

புதன்கிழமை, 4 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

லண்டன், ஜூலை. - 4 - பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்படும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தானில் நிர்வாகம், நீதித்துறை மற்றும் ராணுவத்திற்கு இடையே பூசல் ஏற்பட்டு அந்நாடு அரசியல் நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தில் வசித்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஆஸ்பென் நகரில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில்,  பாகிஸ்தான் பழைய நிலைக்கு ராணுவ ஆட்சி திரும்பி கொண்டிருக்கிறது. நாட்டை காப்பாற்றுவதற்கு மக்கள் ராணுவத்தையே மீண்டும் நாடுகின்றனர். பாகிஸ்தானின் அரசியல் சட்டம் மிகவும் புனிதமானது. எனினும் அதற்கு மாறாக ராணுவ ஆட்சி எதையாவது செய்தால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். நாம் அதை செய்ய போகிறோமா அல்லது அரசியல் சட்டத்தை தாங்கி பிடித்து நாட்டை கவிழ விடப் போகிறோமா?  நான் எனது சொந்த விருப்பப்படி தாய் நாட்டுக்கு நிச்சயம் திரும்புவேன். என்னை இன்டர்போல் மூலம் கைது செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. எனக்கு அதை பற்றி கவலை இல்லை. இந்த ஆண்டில் தேர்தல் நடக்கும் என்று நான் கருதுவதால் நிச்சயம் நாடு திரும்புவேன். கைதாவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். உயிருக்கு ஆபத்து என்றாலும் நான் நாட்டுக்கு திரும்புவேன் என்று முஷாரப் பேசினார்.  அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட வேண்டாம் என்றும் உலக நாடுகளுடன் மோதல் அணுகுமுறையை கைவிட்டு சமரசத்தை பின்பற்றுமாறும் நான் அவர்களுக்கு வலியுறுத்தினேன். ஆனால் ஈரான் அதிபர் நான் கூறிய மேற்படி ஆலோசனையை கேட்கவில்லை. அவர்கள் அணு ஆயுதம் தயாரிப்பதில் உறுதியாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்