முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி சுப்பிரமணியசுவாமி கோவில் மஹாகும்பாபிஷேகம்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

போடி ஜூலை.06 - தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேகத்தை தமிழக நிதியமைச்சரும், கழக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவில் போடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

போடிநாயக்கனுனூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேகத்தை ஜூன் 01-ம் தேதி துவங்கி ஜூன்-05 வரை 5 நாள்கள் நடைபெற்றது. இதில் முதல் நாளான ஜூன் 01-ம் தேதி அனிக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹாசங்கல்பம், ஆச்சார்யவரணம், புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், தனபுஜை, கணபதி ஹோமம், புர்ைணாஹூதி, தீபாராதனை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, ரசேஷாக்னஹோமம் போன்ற புஜைகளும்,

இரண்டாம் நாளான ஜூன் 02-ம் தேதியன்று நவக்ரஹஹோமம், சாந்தி ஹோமம், மிருத்ஸங்பிரஹணம், அங்குரார்ப்பணம், ரசஷாந்தனம், மண்டபாராதனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், அக்னிகார்யம், திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாராதணை போன்ற நிகழ்ச்சிகளும்,

மூன்றாம் நாளான ஜூன் 03-ம் தேதியன்று விசேஷசந்தி, விக்னேஸ்வர புஜை, புண்யாஹவாசனம், யாகசாலை பிரவேசம், இரண்டாம் காலயாகபுஜைகள், அஷ்டாதசக்ரியாவளி, திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை, விசேஷசந்தி, விக்னேஷ்வர புஜை, மூன்றாம் காலயாகபுஜைகள், பரிவார அஷ்டபந்தனம், தீபாராதணை போன்ற நிகழ்ச்சிகளும்,

நான்காம் நாளான ஜூன் 04-ம் தேதியன்று விசேஷசந்தி, விக்னேஸ்வர புஜை, புண்யாஹவாசனம், யாகசாலை பிரவேசம், நான்காம் காலயாகபுஜைகள், விமான கலசம் வைத்தல், திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை, விசேஷசந்தி, விக்னேஷ்வர புஜை, புண்யாஹவாசனம், யாகசாலை பிரவேசம், ஜந்தாம் காலயாகபுஜைகள், லட்சுமிபுஜை, யந்த்ர ஸ்தாபனம், மூலவர் அஷ்டாந்தனம், திரவ்யாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை போன்ற நிகழ்ச்சிகளும்,

ஜந்தாம் நாளான ஜூன் 05-ம் தேதியன்று ஜந்தாம் காலயாகபுஜைகள், பிம்பசுத்தி, ரசஷாபந்தனம், ஸ்பர்சாஹூதி, புர்ைணஹூதி, தீபாரதணை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் காலை 9.15 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் புஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேல் சுமந்து வந்த தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்;செல்வம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கோபுரத்தில் நின்றபடி பச்சை கொடி அசைத்து கும்பாபிஷேகத்தை துவக்கி வைத்தார். அமைச்சர் கொடி அசைத்தவுடன்  விமான, ராஜகோபுரத்தில் இருந்த கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதனை தொடர்ந்து சபரிவாரஸ்ரீவள்ளி தெய்வானைக்கும், அருள்மிகு சுப்பிரமணியசுவாமிக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தின் போது வானத்தில் கருடபகவான் தரிசனம் கிடைத்தை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதினார்கள்.

மேலும் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து நடைபெற்ற புஜையில் தீபாராதணை நடைபெற்றது, அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் அரோகரா, அரோகரா என்ற சரணகோஷமிட்டு முருகப்பெருமானை வழிப்பட்டனர்.

இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவரும், போடி நகர்மன்ற தலைவருமான பழனிராஜ், கெளரவத்தலைவர் முத்துவீர சுருளியம்மாள், கோவில் தக்கார் சுதா, திருப்பணிக்குழுவினர்கள் - பாலமுருகன், தியாகராஜன், வடமலை ராஜையபாண்டியன், வேல்ராஜ், கண்ணன் (எ) கிருஷ்ணராஜ், பாலசுப்பிரமணியன், சம்பத், ராஜ்மோகன், சுந்தர்ராஜ், கதிரேசன், கருப்பையா, பெரியமனோகரன், ராமசுப்பிரமணியம் (எ) ரமேஷ், ராஜகோபால், சுப்பிரமணி, மெய்யப்பன், பெருமாள், சந்திரசேகர், ராஜா, மோகன், மாரியப்பன், ராம், சுருளிவேல், ராமநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

போடிநாயக்கனுனூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு போடி ஜ.கா.நி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கான அன்னதானத்தினை பெரியகுளம் கைலாசப்பட்டி அருள்மிகு கைலாசநாதர்சுவாமி திருக்கோவில் ஆலோசகர் ஓ.பி.ரவீந்திரநாத், போடிநாயக்கனுனூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு பரமசிவன் திருக்கோவில் ஆலோசகர் ஜெயபிரதீப் ஆகியோர் வழங்கினார்கள்.

யாகசாலை புஜைகளை பழனி திருக்கோவில் வேதசிவாகம பாடசாலை முதல்வரும், ஆகம வல்லுனர் குழு தலைவருமான பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்