முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை: 2 வாரங்களில் 67 பக்தர்கள் பலி

வியாழக்கிழமை, 12 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, ஜூலை 13 - அமர்நாத் யாத்திரையில் கடந்த 2 வாரங்களில் மொத்தம் 67 பக்தர்கள் மரணம் அடைந்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் இமயமலைப்பகுதியில் 3889 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவிலில்  உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். 

இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி துவங்கியது. இந்த யாத்திரை வருகிற ஆகஸ்ட் மாதம் 2- ம் தேதி ரக்ஷா பந்தன் தினத்தில் முடிவடைகிறது.

இந்த ஆண்டு  இந்த யாத்திரைக்காக 4.5 லட்சம்  பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

யாத்திரை  துவங்கி கடந்த 17 நாட்களுக்குள்  67 யாத்ரீகர்கள்  மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்  மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு  யாத்திரையின் போது 105 பக்தர்கள்  மரணம்  அடைந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு 17 நாட்களில் 67 பேர் மரணம் அடைந்துள்ளது  ஸ்ரீ அமர்நாத் கோவில் அறங்காவலர்கள் குழுவை  கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அறங்காவலர் குழுவுக்கு காஷ்மீர் கவர்னர் என்.என். வோரா தலைவராக இருக்கிறார்.

அமர்நாத்  யாத்ரீகர்களுக்கு போதுமான சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளை மேலும் அதிகரித்து  மரண விகிதத்தை  குறைக்க வேண்டும் என்று காஷ்மீர் அரசை அறங்காவலர் குழு  கேட்டுக்கொண்டுள்ளது.

அமர்நாத் செல்லும் வழியில் மருத்துவ வசதிகளை  அதிகப்படுத்த  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காஷ்மீர் அரசு  அதிகாரிகள்  கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்