ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி,ஜூலை.15 - ஸ்ரீவில்லி வருகை தந்த கவர்னர் ரோசய்யா ஆண்டாள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். கவர்னர் தனது துணைவியாருடன் ஆண்டாள் கோவிலுக்கு வந்திருந்தார். அவர்களை கோவில் தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் குருநாதன், ஆகியோர் வரவேற்றனர்.  கோவிலுக்கு வந்த கவர்னர் தம்பதியர் சுவாமி தரிசனம் செய்தனர்.கோவில் அர்ச்சகர்கள் ரமேஷ், கிச்சப்பன், ரகு ஆகியோர் அர்ச்சனை செய்து கவர்னருக்கு பிரசாதம் வழங்கினர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு கவர்னர் காரில் புறப்பட்டுச் சென்றார்.  கவர்னர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: