முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் ஓட்டு வேட்டை

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், ஏப்.2 - திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி யூனியனில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் கூட்டணி கட்சியினருடன் சென்று ஓட்டு வேட்டை ஆடினார். திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் நேற்று காலை கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் கள்ளிக்குடி யூனியனில் சூறாவளிப்பிரச்சாரம் செய்தார். அப்போது கே.வெள்ளாகுளம், மையிட்டான்பட்டி, சேர்வைகாரன்பட்டி, கொக்குளம், உன்னிபட்டி, பேய்குளம் ஆகிய கிராமங்களில் வீதிவீதியாக சென்று ஓட்டு வேட்டை ஆடினார். பின்னர் எஸ்.கோபாலபுரத்தில் தனது பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் செங்கப்படை, சுவாமிமல்லம்பட்டி, கரிசல்காளம்பட்டி, சிவரக்கோட்டை, எஸ்.பி.நத்தம், லட்சுமிபுரம், பொட்டல்பட்டி, அகத்தாபட்டி, அலங்காரபுரம், வடக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்து விட்டு லாலாபுரத்தில் தனது ஓட்டு வேட்டையை நிறைவு செய்தார். பிரச்சாரத்திற்கு சென்ற அனைத்து பகுதிகளிலும் பெருவாரியான பொதுமக்கள் திரண்டு வந்து அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு தருவதாக உறுதியளித்தனர். அப்போது கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் உலகானி மகாலிங்கம் ஒன்றிய துணைச்சேர்மன் வேப்பங்குளம் கண்ணன் அவைத்தலைவர் வேல்பாண்டி, மொச்சிகுளம் மணி மற்றும் தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் தர்மராஜ், சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் சிகப்புராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony