முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாகிஸ்தான் இடையேவர்த்தக பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை

வியாழக்கிழமை, 19 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஜூலை.- 18 - இந்தியா-பாகிஸ்தான் இடையே பெட்ரோலிய பொருட்கள் வர்த்தகம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை என்று பத்திரிகை செய்தி கூறுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியாமல் இருக்கிறது. இதனால் இருநாடுகளிடையே ஆயுத போட்டியை ஏற்படுத்தியிருப்பதோடு பதட்டமும் தொடர்ந்து நிலவுகிறது. இதை போக்கும் வகையில் இருநாடுகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருநாடுகளிடையே பெட்ரோலிய பொருட்கள் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இருநாடுகளின் கூட்டுக்கமிட்டி இடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. வாஹா எல்லை வழியாக பெட்ரோல், டீசல், மற்றும் எரிபொருளை வர்த்தக ரீதியாக பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு முன்பும் ஒரு தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றது. மூன்று முறை நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை முடிவு எதுவும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் நாட்டு வர்த்தக அமைச்சக வட்டாரத்தை மேற்கோள் காட்டி டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சுங்க வரி, வங்கி பரிமாற்றம், எரிபொருள் வர்த்தகம் ஆகிய தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளிடையே அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்கமிட்டிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 4-வது சுற்றுப்பேச்சுவார்த்தையும் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. இந்தியாவுடன் தாராள வர்த்தகத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது என்று அந்த நாட்டு வர்த்தகத்துறை செயலாளர் முனீர் குரேஷி தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் மின்சாரம் இறக்குமதி செய்யும் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் குரேஷி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்