முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1.25 லட்சம் ஹஜ் பயணிகளுக்கு மத்திய அரசு மானியம்

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. - 22 - இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 1 லட்சத்து 25 ஆயிரம் பயணிகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.  சவுதி அரேபியா நாட்டில் உள்ள முஸ்லீம்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் மெக்காவுக்கு ஆண்டுதோறும் பயணிகள் புனித பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு பயணம் மேற்கொள்வோருக்கு ஹஜ் கமிட்டி ஏற்பாடு செய்கிறது. இவர்கள் விமானத்தில் சென்று வர எவ்வளவு கட்டணம் விதிக்க வேண்டும் என்பதை மத்திய அமைச்சரவை ஆண்டுதோறும் கூடி முடிவு செய்கிறது. ஒவ்வொரு பயணிகளுக்கும் மத்திய அரசு மானியம் வழங்குகிறது.  இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் விமான டிக்கெட்டுக்கு ஒவ்வொருவரும் வரிகள் உட்பட ரூ. 20 ஆயிரம் செலுத்த வேண்டும். அதற்கு மேலாகும் தொகையை அரசு மானியமாக வழங்கும். இதன் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் பயன் பெறுவர். மேலும் கடந்த 2011 ம் ஆண்டு எத்தனை பேருக்கு மானியம் வழங்கப்பட்டதோ அதே எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டும் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு ஹஜ் பயணியும் விமான டிக்கெட்டுக்கு கடந்த 2011 ம் ஆண்டு ரூ. 16 ஆயிரம் செலுத்த அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் 17 ம் தேதி முதல் ஹஜ் பயணிகளுக்கான விமானம் புறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்