முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என்று நினைக்கவேயில்லை

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 24 - 5 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன் என்று நான் நினைக்கவேயில்லை என் று இந்தியாவின் முன்னணி இரட்டைய ர் ஸ்பெசலிஸ்டுகளில் ஒருவரான மகே ஷ் பூபதி தெரிவித்தார். மேலும், லண்டன் ஒலிம்பிக் போட்டி யின் போது விளையாட்டு கிராமத்தி ல்  ஜமைக்காவின் நட்சத்திர ஓட்டப் பந் த ய வீரரான உசேன் போல்ட்டை நே ரி ல் சந்தித்து பேச வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். 

லண்டனில் உள்ள விளையாட்டு கிரா மத்தில் நிருபர்களைச் சந்தித்த பூபதி அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கை யில் மேற்கண்டவாறு கூறினார். 

நான் எனது டென்னிஸ் வாழ்க்கையை துவங்கிய போது தொடர்ந்து 5 போட்டியில் பங்கேற்பேன் என்று நான் நினைக்கவேயில்லை. இது எனக்கு கிடைத்த கெளரவமாகும். மீண்டும் இந்திய அணி சார்பில் நான் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது என் னைப் பொறுத்தவரை ஒரு சிறப்பான தருணமாகும் என்றும் அவர் தெரிவித் தார். 

நான் வெற்றிகரமான நீண்ட டென்னி ஸ் வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் ஆசிர்வதிக்கப்பட்டு இருக் கிறேன். எனது வாழ்க்கையில் 5-வது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள் வது ஒரு மைல் கல்லாகும் என்றும் அவர் கூறினார். 

உசேன் போல்ட்டை ஏன் சந்திக்க விரு ம்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, மனித குலத்தின் சிறந்த பிரதிநி தியாக அவர் திகழ்கிறார். தற்போதைய நிலையில் பிரபஞ்சத்தின் சிறந்த வீரரா க அவர் இருக்கிறார். சுத்தமானவராக வும் இருக்கிறார். இளைய தலைமுறை யினரை அவர் கவர்ந்து இருக்கிறார். இந்த வருடம் ஒரு சில போட்டிகளில் அவர் தோல்விஅடைந்து இருக்கிறார். இதன் மூலம் எந்த ஒரு வீரரும் தொடர்ந்து வெற்றி பெற முடியாது என்பது நிரூபணமாகிறது. தவிர, அவர் முதல் தர நாட்டிலிருந்து வரவில்லை என்ப தை நினைவு கூற வேண்டும் என்றும் மகேஷ் தெரிவித்தார். 

ஒலிம்பிக்கில் டென்னிஸ் பிரிவில் வா  ய்ப்பு குறித்து அவரிடம் கேட்ட போது, பதக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் காத்திருப்பதாகவும் அவர் கூறி னார். 

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் விளை யாடுவதைப் பொறுத்தே வெற்றி உள்ளது. இந்திய அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் 20 முதல் 25 சிறந்த அணிகள் பங்கேற்கின்றன. முத ல் இடத்தைப் பிடிக்க 4 போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் பங்கேற்போம் என்று ம் அவர் தெரிவித்தார். 

என்னைப் பொறுத்தவரை ஒலிம்பிக் போட்டி கிராண்ட் ஸ்லாம் போட்டி யை விட கடும் சவால் மிக்க போட்டி யாகும். இதில் சிறந்த மற்றும் பெரிய நட்சத்திர வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள டென்னிஸ் வீரர்களும் இரட்டை யர் பிரிவில் கலந்து கொள்வார்கள். ஆனால் நான் மற்ற வீரர்கள் குறித்து கவலை கொள்வது இல்லை. நானும் பொபண்ணாவும் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், நானும் , பொபண்ணாவும் இணைந்து பதக்கம் வெல்லும் பட்சத் தில் இது எனது வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்றும் பூபதி குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்