முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தை பார்வையிட வந்த ரயில்வே அமைச்சருக்கு ஆடம்பர வரவேற்பு

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஆக.- 2 -  புதுடெல்லி -​சென்னை அதிவேக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பெட்டியில் தீப்பிடித்து 32 பேர் பலியான சம்பவம் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை பார்வையிட வந்த ரயில்வே அமைச்சருக்கு பட்டு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  சாதாரண பயணிகள் பயணம் செய்யும் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் கொசு, எலித் தொல்லை, மூட்டைப் nullச்சி, கரப்பான் nullச்சிகள் திரிகின்றன. பெரும்பாலானவை பழைய பெட்டிகளாக ஓடுகின்றன. பழைய பெட்டிகளில் பயணம் செய்யும்போது அவை எழுப்பும் சத்தத்தில் இரவில் தூங்க முடிவதில்லை. சாதாரணமாக ரெயில் ஓடும்போதே விபத்து நடந்தது போன்ற சத்தம் கேட்கிறது. இதனால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்யும் நிலை உள்ளது. இதையெல்லாம் சகித்துக் கொண்டாலும் அவசர காலத்துக்கான உதவி வசதிகள் எதுவும் இல்லை. தீயணைப்பு கருவிகள்கூட முறையாக இல்லை. ஆனால் ரெயில்வே அமைச்சர் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் பயணம் செய்ய மட்டும் சொகுசு ரெயிலை பயன்படுத்துவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தை பார்வையிட 12 மணி நேரம் கழித்து விமானத்தில் சென்னை வந்த ரெயில்வே அமைச்சர் முகுல்ராய் இங்கிருந்து நெல்லூருக்கு சொகுசு ரெயிலில் சென்றார். பின்னர் அதே சொகுசு ரெயிலில் சென்னை திரும்பினார். சென்ட்ரலில் அவர் இறங்கும் இடத்தில் சிவப்பு நிறத்தில் அழகிய வடிவமைப்புடன் தரைவிரிப்பு விரிக்கப்பட்டு இருந்தது. இது அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. விபத்தை பார்த்துவிட்டு வரும் அமைச்சருக்கு இத்தகைய வரவேற்பு தேவைதானா? என்று அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர். அவர் வந்து இறங்கிய சென்ட்ரலில் 6​வது பிளாட்பாரத்தில் 3 பாட்டில் நறுமணம் வீசும் திரவம் தெளிக்கப்பட்டது. முகுல்ராய் வருவதற்கு முன் பிளாட்பாரம் முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென்று வைக்கப்பட்டது. அவர் வந்த ரெயிலுக்கு நேரடி மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. வழியில் மின்சார கோளாறு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 2 எலக்ட்ரீஷியன்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர் பயணம் செய்த சொகுசு ரெயில் பெட்டியின் மதிப்பு ரூ.1 1/2 கோடி. இது அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும், வசதிகளும் கொண்டது.

இன்ஸ்பெக்ஷன் காரி' என்றழைக்கப்படும் இந்த சொகுசு ரெயில்களை ரெயில்வே அமைச்சர், ரெயில்வே மண்டல பொதுமேலாளர்கள், ரெயில்வே வாரியத் தலைவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. உள்ளே ஆலோசனைக்கூடம், படுக்கை அறை, சமையல் அறைகளும் இருக்கும். தீயணைப்பு கருவிகளும், nullச்சிகளை கட்டுப்படுத்தும் கருவிகளும் வைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் சாதாரண பயணிகள் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் எந்த பாதுகாப்பு வசதியும், பராமரிப்பும் இல்லை. ரெயில்வேக்கு பல ஆயிரம் கோடி வருமானத்தை அள்ளித்தரும் சாதாரண பயணிகளுக்கும் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே ரெயில் பயணிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்