முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கை ஸ்வான், யுனிடெக்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி. ஏப்ரல்.- 4 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்ட முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற  முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவின் கெடுதி நோக்கம் கொண்ட கொள்கை முடிவை  ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஒயர்லஸ் கம்பெனிகள் அறிந்துள்ளன என்று இது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ.  தெரிவித்துள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு  2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்  ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக  மத்திய கணக்கு  தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்துத. இதற்கு அப்போதைய தொலை தொடர்பு  துறை அமைச்சர் ஆ.ராசாவே முழு பொறுப்பு என்றும்  அக்குழு தனது அறிக்கையில் குற்றம்சாட்டியிருந்தது. 

இது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசா இப்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஆ.ராசாவுக்கு எதிராக 80,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ.சிறப்பு நீதி மன்ற நீதிபதி ஓ.பி. சைனி முன்பு  சி.பி.ஐ. நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையில் சி.பி. ஐ.சில முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஒதுக்கீட்டில்முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற ஆ.ராசாவின் கொள்கை முடிவு  ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஒயர்லஸ் கம்பெனிகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பே முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்றும் அதனால்தான் அந்த இரு கம்பெனிகளும்  தேவையான வரைவு ஓலை ( டிமாண்ட் டிராப்ட் ) உடன் தயாராக இருந்திருக்கின்றன என்றும் அந்த குற்றப்பத்திரிகையில் .சி.பி. ஐ. கூறியுள்ளது.

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கை முடிவு தொடர்பான தகவல் தொலை தொடர்பு அதிகாரிகளால் சில குறிப்பிட்ட கம்பெனிகளுக்கு முன் கூட்டியே கசிய விடப்பட்டுள்ளது. 

அதாவது 2008 ஜனவரி 10 ம் தேதிய  கடிதம் குறித்த விஷயம் முன் கூட்டியே இந்த இரு கம்பெனிகளுக்கும் தொலை தொடர்பு அதிகாரிகளால் கசிய விடப்பட்டுள்ளது.

அதனால்தான் மற்ற கம்பெனிகளை காட்டிலும் இந்த இரு கம்பெனிகளும் டெபாசிட்  கட்டணத்தை உடனடியாக டி.டி. எடுத்துக்கொடுக்க முடிந்துள்ளது என்றும் அந்த குற்றப்பத்திகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இந்த ஸ்வான் டெலிகாம் கம்பெனியின் நிறுவனர்  சாஹித் பல்வாவை சி.பி.ஐ.அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.யுனிடெக் ஒயர்லஸ் ( தமிழ்நாடு ) பிரைவேட் லிமிடெட் கடந்த 2007 அக்டோபர் - நவம்பர்  கால கட்டத்திலேயே டி.டி. யை எடுத்துவைத்துக்கொண்டிருந்தது என்றும் அந்த குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. கூறியிருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்