முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத், இமாச்சல் சட்டமன்ற தேர்தலில் அன்னாஹசாரே குழு போட்டியிடுமா?

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,ஆக. - 6 - பாரதீய ஜனதா ஆளும் குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து அன்னா ஹசாரே குழு இன்னும் முடிவு செய்யவில்லை.  ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே அன்னா ஹசாரேவின் கொள்கையாக உள்ளது. இதன் பொருட்டு வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இதுவரை பல போராட்டங்களை நடத்தி விட்டார். 2 முறை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர் குதித்து விட்டார். இந்த நிலையில் ஊழலை ஒழிக்கும் வகையில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அன்னா ஹசாரே குழு முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.  ஆனால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தல் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடுவது பற்றி இதுவரை அன்னா ஹசாரே குழு பேசவே இல்லை. வாய் திறக்கவும் இல்லை. அப்படி போட்டியிட்டால் அது அன்னா ஹசாரே குழுவுக்கு ஒரு பலப்பரிட்சையாக அமையும். கர்நாடகத்திலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதே போல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்த மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க அரசுகளை எதிர்த்து போட்டியிடுவதா? வேண்டாமா என்பது குறித்து இன்னமும் இந்த குழுவினர் முடிவு செய்யவில்லையாம். நாங்கள் அது பற்றி முடிவு செய்யவில்லை என்று அன்னா ஹசாரே குழு உறுப்பினர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்தார். இது தொடர்பாக முக்கிய கமிட்டி கூட்டம் விரைவில் கூடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யும் என்றும் மற்றொரு உறுப்பினர் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்