Idhayam Matrimony

திருமங்கலத்தில் வடிவேலு பிரச்சாரம் நெரிசலில் சிக்கி குழந்தைகள் கதறல்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம்,ஏப்.- 4 - திருமங்கலம் நகரில் தி.மு.க. வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் குழந்தைகள் சிக்கி கதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  நேற்று காலையில் நடிகர் வடிவேலு திருமங்கலம் நகரில் பிரச்சாரம் செய்வார் என தி.மு.க. வினர் அறிவித்திருந்தனர். ஆகவே அவரைக் காண பெண்கள் மற்றும் குழந்தைகள் காலை முதலே திரண்டனர். அவரது வருகை காலதாமதமானதை தொடர்ந்து வெயிலின் தாக்கத்தால் சில குழந்தைகள் மயங்கி விழுந்தன. மூன்றரை மணி நேரம் தாமதமாக வடிவேலு வந்த போது போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் டி. கல்லுப்பட்டி பகுதியில் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த ஒருவர் வடிவேலுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த தி.முக.வினர் அவரை நையப்புடைத்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்த நபரை போலீசார் மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதனால் அப்செட் ஆன வடிவேலு பிரச்சாரத்தை அவசர அவசரமாக முடித்து விட்டு அப்பகுதியில் இருந்து எஸ்கேப் ஆனார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago