டெசோ மாநாட்டில் ஈழம் வார்த்தைக்கு தடை

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஆக.11 - டெசோ மாநாட்டில் `ஈழம்' என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டில் `ஈழம்' என்ற வார்த்தையை நீnullக்குவதுடன், மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.        

தி.மு.க. சார்பில் வருகிற 12-ந்தேதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எதிரே  உள்ள ஒய்.எம்.சி. மைதானத்தில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு என்ற பெயரில் டெசோ மாநாடு நடைபெறுகிறது.

இந்நிலையில் டெசோ அமைப்பாளர் ஹசன் முகமது அலிக்கு மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் ஆர்.கே.நாயக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- வெளிநாட்டு பிரதிநிதிகளை கொண்டு அரசியல் காரணங்களுக்காக இது போன்ற சர்வதேச மாநாடுகள் நடத்துவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால்  மாநாட்டில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்பதில் ஈழம் என்ற வார்த்தையை நீnullக்க வேண்டும்.மேலும் இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளின்  அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: