யோகா குரு பாபா ராம்தேவ் 2-வது நாளாக உண்ணாவிரதம்

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி. ஆக.11 - கறுப்பு பணத்தை மீட்க கோரி யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று 2 வது நாலாக  டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள  கறுப்பு பணத்தை  மீட்க மத்திய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில்  யோகா குரு பாபா ராம்தேவ் 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தை  துவக்கினார்.

இந்த உண்ணாவிரதம் நேற்று 2 வது நாளாக நடைபெற்றது. நேற்று ராம்தேவுடன் இந்த உண்ணாவிரதத்தில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த 3 நாள் உண்ணாவிரரதம் முடிந்த பிறகு  அடுத்த கட்ட போராட்டம் குறித்து  மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று  ராம்தேவ்  கூறினார்.

வெளிநாட்டு வங்கிகளில் ரூ. 20,000 லட்சம் கோடிக்கு கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வந்தால் பல நற்பணிகளை செய்யலாம் என்றும் வர்  கூறினார்.

இது போன்ற உண்ணாவிரத போராட்டங்களை நடத்த ஆர்வமுள்ள தொண்டர்கள்  தனது ஹரித்துவார் ஆசிரமத்திற்கு வரலாம் என்றும் அங்கு அவர்களுக்கு போதுமான பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் இந்த பயிற்சியை  அடுத்து அவர்கள் நீண்டகால  உண்ணாவிரதத்தை  மேற்கொல்ளலாம் என்றும் அவர்  யோசனை கூறினார்.

ராம்தேவின் உண்ணாவிரதத்தை முன்னிட்டு ராம்லீலா மைதானத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  முதல் நாள் உண்ணாவிரதத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆனால்  2வது நாள் உண்ணாவிரதத்தில் 8 ஆயிரம்  பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்லீலா மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசார் 30 ஆயிரம் மக்களை  கையாள முடியும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: