முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆண்டுகளில் 58 ராக்கெட்டுகளை இஸ்ரோ அனுப்ப திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஆக. 12 - செயற்கைக்கோள்கள் மற்றும் செலுத்து வாகனங்கள் என 58 ராக்கெட்டுகளை அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

இஸ்ரோ சார்பில் 8, 9, மற்றும் 10 வது ஐந்தாண்டு திட்ட காலங்களில் தலா 10 முதல் 13 ராக்கெட்டுகளும், 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 29 ராக்கெட்டுகளும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.

நடப்பு 12-வது திட்ட காலத்தில் மொத்தம் 58 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் அனுப்பப்பட்டதைப் போல 2 மடங்கு அதிகமாகும். இதில் 33 செயற்கைக்கோள்களும், 25 செலுத்து வாகனங்களும் அடங்கும். இவற்றில் 25 திட்டங்கள் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். உதிரி பாகங்கள் சப்ளை மற்றும் கட்டுமானம் உள்பட இஸ்ரோ திட்டப் பணிகளில் அவுட்சோர்சிங் பணி இப்போது 50 முதல் 60 விழுக்காடாக உள்ளது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்