மும்பை கண்டன ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு - பலி 2

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஆக.12 - மும்பையில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் பலியானார்கள் மற்றும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையொட்டி போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். அசாம் மாநிலத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. அங்கு கலவரத்திற்து இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் பலர் படுகாயத்துடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசாம் கலவரத்தில் முஸ்லீம்களும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று மும்பையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரஷா அகாடமி என்ற அமைப்பின் சார்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கலவரம் வெடித்தது. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். கலவரத்தில் 2 பேர் பலியானார்கள் மற்றும் அந்த வழியாக சென்ற மோட்டார் வாகனங்களும் தாக்கப்பட்டன. ஒருசில வாகனங்ளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டம் நடந்த பகுதி போர்க்கலமாக காட்சி அளித்தது. வன்முறையாளர்கலை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். அவர்கள் கலைந்து செல்லாததாதல் போலீசார் முதலில் தடியடி நடத்தினர். பின்னர் வான்த்தை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டனர். இந்த சம்பவத்தால் மும்பை நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதட்டமான பகுதிகளில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: