முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: ரங்கசாமி ராஜினாமா செய்யவேண்டும்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுச்சேரி, ஆக.- 13 - மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை நோனாங்குப்பம் பாலத்தில் நேற்று முன்தினம்(10-ந் தேதி) போலீஸ் பாதுகாப்பில் வேனில் கொண்டு செல்லப்பட்ட கைதி ஜெகனை ஒரு கும்பல் திட்டமிட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ளது. புதுவை மாநில வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததே இல்லை. இதனால் புதுவை மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.  ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்ற பிறகு இத்தகைய சம்பவங்கள் தொடர்கிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. புதுவையில் பல பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, பெண்களிடம் நகை பறிப்பது, வீடுகள் அபகரிப்பு போன்ற சம்பவங்கள் சர்வசாதரணமாக நடந்து வருகின்றது. புதுவையை ரவுடிகள் ராஜ்யமாக மாறி வருகிறது.  காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை எதிர்கட்சிகள் ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் இ ந்த ஆட்சியின் மீதான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். ரவுடிகளை ஒடுக்குவதற்கு கொண்டு வரப்பட்ட குண்டர் சட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  காவல்துறை அதிகாரிகள் 24 ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகப்படுத்த அனுமதி கோட்டு கோப்பை முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பினார்கள். இந்த பட்டியலில் இருக்கும் ரவுடிகளில் பாதி பேர் ரங்கசாமி தொகுதியை சேர்ந்தவர்கள். எனவே முதல்வர் ரங்கசாமி அதற்கு அனுமதி அளிக்காமல் கோப்பை கிடப்பில் போட்டு விட்டார். இதனால் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிசில்குமார் ஷிண்டேவை சந்தித்து பேசினேன். அப்போது புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், மக்கள் பாதுகாப்போடு இல்லை என்று கூறியதுடன் மத்திய அரசு புதுவை மாநிலத்தை கண்காணிக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக புதுவையிடம் அறிக்கை கேட்டு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன். அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.  கைதி ஜெகனை அழைத்து சென்ற போது போலீசாரிடம் ரிவால்வர் துப்பாக்கி இருந்தும் அதை ஏன் படுத்தவில்லை? இதில் பல மர்மங்கள் உள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஜகோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பில் இருந்த ரவுடிக்கே இந்த நிலை என்றால்? சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும்? சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் தார்மீக பொறுப்பு ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ரங்கசாமியின் ஆட்சியில் சுற்றுலா வளர்ச்சி, பொருளாதாரா முன்னேற்றம், தொழிற்சாலைகள் போன்ற அனைத்தும் குறைந்து விட்டது. 

மாநில வளர்ச்சியே பின்தங்கி விட்டது. மக்களின் வாக்குகளை பெற்ற ரங்கசாமி தன்னை நிரந்தர முதல்வராக நினைத்துக் கொண்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை தவறாக விமர்சித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும். கைதி கொலை குறித்து நீதி விசாரணை கோரி கவர்னரை சந்தித்து வலியுறுத்துறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்