முக்கிய செய்திகள்

திரிணமுல் காங்.வேட்பாளர் மீது தாக்குதல் - ஒருவர் படுகொலை

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      இந்தியா
Trinamool-Congress logo 0

 

பர்தாமான். ஏப்.- 5 - மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல்  காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல்  நடத்தப்பட்டது. அப்போது வேட்பாளரை காப்பாற்ற சென்ற ஒரு தொண்டர் படுகொலை செய்யப்பட்டார். மேற்கு வங்க  மாநிலத்தில் 6 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்க மாநிலம்   ஜமூரியா சட்டமன்ற தொகுதியில திரிணமுல் காங்கிரஸ் கட்சி  சார்பில் போட்டியிடுபவர் பிரபாத் சத்யோபாத்யாய். 

இவரது  தனது காரில் சென்று கொண்டிருந்தார். 

அவரது காரை வழி மறித்த  ஒரு கும்பல் அவரை காரில் இருந்து தர  தரவென்று கீழே இழுத்து போட்டு தாக்கியது. அப்போது அந்த வேட்பாளரை காப்பாற்ற அவரது கட்சியை  சேர்ந்த  ராபின் காஜி  என்பவர் முயற்சி செய்தார்.  அப்போது அந்த கும்பல் தலைவன் தனது காரை வேகமாக ஓட்டி வந்து காஜி மீது மோதி  விட்டு தனது சகாக்களுடன் வேகமாக புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த வேட்பாளரும் அவரது ஆதரவாளும்  ஆஸ்பத்திரிக்கு  கொண்டு  செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே தொண்டர் காஜி மரணம் அடைந்து விட்டார்.

இநத தாக்குதலை உள்ளூர் நிலக்கரி கொள்ளையன் என்று அழைக்கப்படும்  தீனபந்து பரூய் தனது சகாக்களுடன் வந்து இந்த தாக்குதலை  நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிலக்கரி கொள்ளையன் பரூயை கைது  செய்ய வேண்டும் என்று கோரி திரிணமுல் வேட்பாளரும் அவரது ஆதரவாளர்களும் ஒரு போலீஸ் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய போததான் அந்த கொள்ளையனே நேரில் வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளான். 

இந்த தாக்குதல் தொடர்பாக  2 பேரை போலீசார் கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: