முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈழத் தமிழருக்காக இந்தியா ஒதுக்கியநிதி: கிருஷ்ணா விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. - 20 - இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா ஒதுக்கிய நிதி தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார். மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக அவர் அளித்த பதில் வருமாறு: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள் குடியேற்றத்துக்காகக் அந்நாட்டுக்கு 2009-10-ம் நிதியாண்டில் ரூ. 68.96 கோடி, 2010-11-ம் நிதியாண்டில் ரூ. 93.86 கோடி, 2011-12-ம் நிதியாண்டில் ரூ. 181.94 கோடி வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியில் ரேஷன் பொருட்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில் தற்காலிக மருத்துவமனைகள் நிறுவப்பட்டன. மருந்துகள் வழங்கப்பட்டன. நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்ய இந்தியாவிலிருந்து 7 குழுக்கள் அனுப்பப்பட்டன. உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தோருக்காக 10,400 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட தங்குமிடப் பொருள்கள், வேளாண் உற்பத்தியைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் 95 ஆயிரம் பொருள்கள், 500 டிராக்டர்களும் வழங்கப்பட்டன. இவை தவிர வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் பயணிகள் பேருந்து சேவைக்காக 55 பேருந்துகளை இந்தியா இலவசமாக வழங்கியது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாணம், வவுனியாவில் செயற்கை கை, கால் உறுப்புகளை பொருத்துவதற்காக இந்திய நிபுணர்கள் ஒரு மாத முகாம் நடத்தினர். போரின்போது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சரி செய்ய 4 லட்சம் சிமெண்ட் மூட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என்று கிருஷ்ணா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்