முக்கிய செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட் வெற்றி நான்கு கோடி ரூபாய் பரிசு தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      தமிழகம்
dohni

சென்னை, ஏப்.- 5 - உலக கோப்பை கிரிக்கெட் வெற்றிக்கு ரூ.4 கோடி பரிசு   அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நடைபெற்று முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மாபெரும் வெற்றி பெற்ற கேப்டன் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினருக்கு தமிழக அரசின் சார்பில் மூன்று கோடி ரூபாயும், அந்த அணியிலே தமிழகத்தின் சார்பில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வினுக்கும் ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கும் என்றும், இதற்கான ஒப்புதலை தேர்தல் ஆணையத்திடம் பெறப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்: