முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக மத்திய மந்திரிகளால் எந்த பயனும் இல்லை

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

கும்பகோணம் ஆக.26 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றிய அதிமுக சார்பில் கழக அரசின் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருபுவனம் சன்னதி தெருவில் பேரூர் கழக செயலாளர் சிங் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பேரூர் அம்மா பேரவைச் செயலாளர் ஆத்மநாபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் ரெங்கசாமி எம்.எல்.ஏ, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தயாளன், ஒன்றியக்குழு உறுப்பினர் தவமணி, குடந்தை நகரச் செயலாளர் ராம.ராமநாதன், மாநில கைத்தறி பிரிவு செயலாளர் கே.ஜே.லெனின், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வி.கே.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான ஏ.வி.கே.அசோக்குமார் செய்திருந்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திரைப்பட நடிகர் ராமராஜன், திமுகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகள“ல் தமிழக மக்களுக்கு எந்தவித பயனும் செய்துகொடுக்கவில்லை தமிழக மக்களுக்காக குறிப்பாக காவேரி பிரச்சினை, கரண்ட் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழ்மக்கள் பிரச்சினை ஆகியவற்றிற்கு இதுவரை பிரதமரையோ மற்றும் பாராளுமன்றத்திலேயோ எந்தவிதமான குரலும் எழுப்பிவில்லை. ஆதலால் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்துள்ள திட்டங்கள் எல்லாம் அருமையாக உள்ளது. இந்த திட்டங்களை பார்த்து உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், தனது மாநிலத்தில் அமல்படுத்தி வருகிறார். அதே போல அம்மாவின் திட்டங்களை உ.பி, தேர்தலில் வாக்குறுதியாக அளித்து அமோக வெற்றி பெற்றுள்ள“ர். ஆகவே தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடக்கூடிய ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என்பதை ஆணித்தனமாக கூறுகிறேன்.

தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். இலங்கை பிரச்சினையாக இருந்தாலும் சரி, காவேரி பிரச்சினையாக இருந்தாலும் சரி, இந்திய பிரதமருக்கும் அடிக்கடி கடிதம் எழுதி தமிழக நலனுக்காக நேரில் சந்திக்கக்கூடிய ஒப்பற்ற தலைவியாக ஜெயலலிதா செயல்படுகிறார். ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றார்.

மேற்கண்டவாறு நடிகர் ராமராஜன் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் சோழபுரம் க.அறிவழகன், சிஆர்சி மனோகரன், மாவட்ட மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர்.பாலசுப்ரமணியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஆர்கே.சுந்தரராஜன், பேரூராட்சி தலைவர்கள் திருநாகேஸ்வரம் சுவாமிநாதன், வேப்பத்தூர் முருகானந்தம், நகரச் செயலாளர்கள் திருவிடைமருதூர் ராமச்சந்திரன், ஆடுதுறை செல்வம், வக்கீல் க.அறிவானந்தம், ஒன்றிய பாசறை செயலாளர் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் பட்டம்மாள், ஊராட்சி கழக செயலாளர்கள் திருநீலக்குடி ராஜகுமாரன், திருச்சேறை பழனிவேல், திருநறையுர்ை பாண்டியராஜன், நாச்சியார்கோவில் முருகானந்தம், கூகூர் இளங்கோ, விட்டலூர் சசிகுமார் மற்றும் கழக நிர்வாகிகளும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க அண்ணா தொழில் சங்கத் தலைவர் என்.பி.சரவணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்