முக்கிய செய்திகள்

ஒரு மாவீரனின் தாய் என்ற பெருமையோடு வாழ்ந்து மறைந்திருக்கும் பார்வதி அம்மாள் - சரத்குமார் இரங்கல்

Sarath

 

சென்னை, பிப்.21- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் மறைவிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

விடுதலைப் புலிகள் தலைவராய் திகழ்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் தாயார் மரணமடைந்த செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்டுத் தருவதில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு மாவீரனின் தாய் என்ற பெருமையோடு வாழ்ந்து மறைந்திருக்கும் பார்வதி அம்மாளின் மறைவிற்காக உலகமெங்குமிருக்கும் தமிழர்கள் வருத்தத்தோடு கண்ணீர் சிந்தி அவரது மறைவிற்கு வீர அஞ்சலி செலுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. அவருடைய மறைவிற்கு என ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு சரத்குமார் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: