முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் ரூ.5கோடி கட்டுக்கட்டாக சிக்கியது அமைச்சர் நேருவின் உறவினர் மீது பகீர் புகார்

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. ஏப்.- 6 - திருச்சியில் கடந்த சிலதினங்களாக தேர்தல் கமிஷனின் வாகன சோதனையின்போது ஆங்காங்கே பல லட்சங்களும் கோடிகளும் சிக்குகின்றன. இதேபோல் திமுகவினரின் வட்டசெயலாளர்கள், கிளை செயலாளர்கள் வீடுகளின் ஏராளமான வேஷ்டிகள், புடவைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தேர்தல் கமிஷனருக்கு பல கோடி ரூபாய் கார்களில் கடத்திக்கொண்டு செல்வதாக ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் திருச்சி பொன்நகரில் நின்றுகொண்டிருந்த ஒரு ஆம்னி பஸ்ஸை அதிகாரிகள் சோதனையிட்டபோது,அதில் டிராவலர் பேக்கில் ரூ.500, 1000 என்று கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு தேர்தல் அதிகாரி அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை என்னிப்பார்த்தபோது ரூ.5கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இவற்றை தேர்தல் அதிகாரி சங்கீதா பறிமுதல் செய்தார். இந்த பஸ் அமைச்சர் நேருவின் உறவினர் உதயகுமார் என்பவருக்கு சொந்தமானது என்று தகவல் தெரியவருகின்றன. 

இதேபோல் நேற்று முன்தினம் துறையூரில் உள்ள அமைச்சர் நேருவின் ரைஸ் மில்லில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு தேர்தல் அதிகாரிகள் விரைந்தனர். தேர்தல் அதிகாரிகள் வருவதை கண்டவுடன் ரைஸ் மில்லின் பின்புறம் இருந்து 6 கார்கள் மின்னல் வேகத்தில் பறந்து சென்றன. இந்த கார்களை தேர்தல் அதிகாரிகளால் விரட்டிச்சென்றும் பிடிக்க முடியவில்லை. பறந்து சென்ற 6 கார்களும் நாலா புறமும் பிரிந்து சென்று விட்டன. இந்த கார்களில் பலகோடி ரூபாய் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் இருந்து ஒரு காரில்  கொண்டுவரப்பட்ட பணம்தான் இதுவாக இருக்குமோ என்று தேர்தல் அதிகாரிகள் சந்தேகப்படுகின்றன. 

தப்பிச்சென்ற சென்ற மீதமுள்ள 5 கார்களில் எத்தனைகோடி ரூபாய் இருக்கும் என்று தெரியாமல் தேர்தல் அதிகாரிகள் திகைத்து வருகின்றனர். பிடிபட்ட ஒரு காரில் இருந்த இந்த 5 கோடி ரூபாய் பணமா, இல்லை தேர்தல் அதிகாரிகளை திசைதிருப்புவதற்காக வீசப்பட்ட இந்த தொகையை காட்டிலும் பல மடங்கு கடத்தப்பட்டு உள்ளதா? என்று தெரியவில்லை.

இந்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் ரைஸ் மில்லுக்குள் சோதனையிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு இன்டிகா கார் திடீர் என்று வந்து நின்றது. அதில் மூன்று மர்ம நபர்கள் இருந்தனர். அந்த காரை தேர்தல் அதிகாரிகளுடன் வந்த காவல்துறையினர் இன்டிகா காரை சோதனையிடுவதற்காக நெருங்கியபோது காரில் இருந்த மூன்று மர்ம நபர்களும் தப்பி ஓடி விட்டனர். இதனால் காரை மட்டும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

தேர்தல் அதிகாரிகள் அமைச்சருக்கு சொந்தமான ரைஸ்மில்லில் இருந்த பணத்தை பறிக்க முடியாததை கண்டு துறையூர் பகுதியில் உள்ள அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திமுகவினர் பல இடங்களில் தேர்தல் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு கட்டுக்கட்டாக பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகித்து கொண்டுதான் இருக்கின்றனர். இப்படி செய்துகொண்டு இருக்கும் திமுக வினர் தேர்தல் அதிகாரிகள், அதிமுகவினருக்கு சாதமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கின்றனர். உண்மை என்ன என்பது  தற்போது வெட்ட வெளிச்சமாகி அம்பலமாகி விட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago