முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சிவேட்பாளர் ரோம்னி

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன். ஆக.- 30 - அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக மிட் ரோம்னிக் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து யாரை நிறுத்துவது என்பது தொடர்பான குடியரசு கட்சியின் முக்கிய கூட்டம் புளோரிடா மாகானத்தில் உள்ள தம்பா என்ற நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மிட் ரோம்னிக்கு தேவையான .1,144 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. அதனால் பாரக் ஒபாமாவை எதிர்த்து போட்டியிடும் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் அவரே என்று குடியரசு கட்சி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே போல அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பால் ரியான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை.யும் குடியரசு கட்சி வெளியிட்டுள்ளது. குடியரசு கட்சி சார்பில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டாலும் கூட இந்த முடிவை ஏற்றுக்கொண்டு மிட் ரோம்னிக் வருகிற வியாகழக்கிழை தேர்தல் உரை நிகழ்த்துவார். அப்போதுதான் அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று அறிவிக்கப்படும் என்று குடியரசு கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை மிட் ரோம்னி தனது சொந்த சலவில் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வந்தார். இனி வருகிற வியாழக்கிழமை முதல் குடியரசு கட்சி சார்பில் தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து செலவுகளை செய்வார். ரோம்னிக்கு வயது 65. இவர் மசாசூசெட்ஸ் கவர்னராக பதவி வகித்து இருக்கிறார். அரசியலில் நல்ல அனுபவம் உள்ள இவர் அமெரிக்காவின் வருங்காலத்திற்கு நல்ல பணிகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குடியரசு கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாரக் ஒபாமாவின் காலத்தில்தான் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான். அதனால் ஒபாமாவுக்கு அமெரிக்கர்கள் மத்தியில் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.ஆனால் அதே சயமம் ஒபாமாவின் காலத்தில்தான் அமெரிக்க பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே இந்த தேர்தலில் ஒபாமாவின் வெற்றி வாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என்றும் ஒருவேளை அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவர் மீண்டும் ஜனாதிபதியாக வரலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்