முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த பாபு ஜெகஜீவன்ராம் 104-வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை

புதன்கிழமை, 6 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.- 6 - மறைந்த முன்னாள் துணைப்பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் 104-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது. டாக்டர் அம்பேத்கருக்கு பிறகு ஹரிசன மக்களின் தலைவராகவும் இந்திரா காந்திக்கு நம்பிக்கைக்கு பாத்தியமானவராகவும்ம விளங்கியவர் பாபு ஜெகஜீவன்ராம். அவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அமைச்சராக இருந்தவர். மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தபோது பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார். பின்னர் இவருக்கு துணைப்பிரதமர் பதவி கொடுக்கப்பட்டது. ஜனதா அரசுக்கு பின்னர் தனிக்கட்சி தொடங்கி நடத்தினார். அவரது 104- பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபை சபாநாயகர் மீரா குமார், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், லோக்சபை, ராஜ்யசபை செயலாளர்கள் முறையே டி.கே. விஸ்வநாதன், வி.கே. அக்னிஹோத்ரி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ஜெகஜீவன்ராம் வாழக்கை குறிப்பு அடங்கிய  சிறு புத்தகங்களை லோக்சபை செயலாளர் டி.கே.விஸ்வநாதன் கொண்டுவந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கொடுத்தார். பாராளுமன்றத்தில் ஜெகன்ஜீவன்ராம் சிலையை கடந்த 1995-ம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மா திறந்துவைத்தார். 

முன்னதாக யமுனா நதிக்கரையில் இருக்கும் ஜெகஜீவன் ராம் நினைவகத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, லோக்சபை சபாநாயகர் மீரா குமார், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரிகள் நலத்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக், எம்.பி.க்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago