முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூகத்தை மாற்றாது சினிமா இயக்குனர் மிஷ்கின் பேட்டி

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக. - 29 ​ சமூகத்தை மாற்றாது சினிமா. இரண்டரை மணி நேரம் பொழுதை கழிக்கக்கூடிய இடம் என்று இயக்குனர் மிஷ்கின் கூறினார். யு டிவி தயாரிப்பில் மிஷ்கின் இயக்கி உள்ள படம் முகமூடி. இந்தப் படத்தில் ஜீவா, நரேன், நாயகி பூஜா ஹெக்டே என பலர் நடித்து உள்ளனர். நாளை படம் திரைக்கு வருகிறது. இதுபற்றி நிருபர்களிடம் நேற்று மிஷ்கின் கூறியதாவது:- முகமூடி படம் ஒரு காமிக்ஸ் கதை. எதிர்பார்த்தப்படி வந்திருக்கிறது. உதவி இயக்குனர்கள் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றி உதவி இயக்குனர்களுக்குத்தான் போய் சேரும். படம் முழுக்க இரண்டு குழந்தைகள் வருகிறார்கள். இவர்களின் கேரக்டர் பேசப்படும். அதிக எடை கொண்ட உடை உடுத்தி மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் ஜீவா.  அந்த கஸ்டத்திற்கு பலன் கிடைக்கும். நந்தலாலா படம் குழந்தை கதையை கருவாக வந்தது. அதுபோல என்னால் இன்னொரு படம் எடுக்க முடியுமா என்று என்னால் கூறமுடியவில்லை. இந்தப்படம் மூலம் தமிழ்நாட்டில் ஒரு சாகச வீரன் இருக்கிறார் என்பதை சொல்ல வருகிறேன். இதன் திரைக்கதைக்காக கடினமாக உழைத்திருக்கிறேன். முதல் அரை மணி நேரத்தில் கதைக்குள் ஹீரோ வந்து விடுகிறார். அதேபோல மதுவால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மதுவில் மூழ்கி கிடப்பவர்கள் என் மக்கள்.  இதை விளக்கும் விதமாக நானே ஒரு பாடல் எழுதி படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் கமர்ஷியல் இல்லை. கருத்து இருக்கிறது. காரைக்கால் துறைமுகத்தில் க்ளைமாக்ஸ் காட்சி 300 அடி உயரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தை சினிமா மாற்றாது. சினிமா இரண்டரை மணி நேரம் பொழுதை கழிக்கக்கூடிய இடம். இதில் அதை செய்கிறேன், இதை சொல்கிறேன் என்று சொல்வது தேவையற்ற வேலை. எனக்கு 3 டி படத்தில் உடன்பாடு கிடையாது. அது காட்சி வடிவத்தில் படம் பார்ப்பவரை மிரட்டக் கூடிய ஒரு நவீன தொழில் நுட்பம். சினிமா என்பது படம் பார்ப்பவரை உறைய வைக்கக் கூடியது. அதில் ஒரு சில படங்கள் சமூக விஷயங்களை பேசுகிறது. இதைத்தான் நானும் செய்கிறேன். விழா மேடையில் பேசும்போது நான் எமோஷன் ஆகிறேன் என்று பலர் கேட்கிறார்கள். உண்மையாக சொல்கிறேன். மேடை ஏறும்போது ஒரு விதமாக மாறிவிடுகிறேன். உண்மையை பேசுவேன். இது பலருக்கு புரியாது. நான் பேசுவது உண்மை என்பது எனக்கு உண்மையாக இருக்கும். அது போதும். இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்