முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் நெருக்கமான உறவு: அமெரிக்க பார்லி.யில் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      உலகம்

நியூயார்க்,ஏப்.- 7 - இந்தியா ஒரு பிரகாசமான எதிர்காலம் உள்ள நாடு. அந்த நாட்டுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு பாராளுமன்றத்தில் முக்கியமான உறுப்பினர்  ஹாரி ஆகெர்மென் வலியுறுத்தி கூறினார். அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதித்துவ சபையில் ஜனநாயக கட்சி உறுப்பினராக ஹாரி ஆகெர்மன் இருக்கிறார். தெற்காசியாவில் பொருளாதார சவால்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த நாடுகளுடான வெளியுறவுக் கொள்கையில் முன்னுரிமையும் தேவையும் என்ற தலைப்பில் உறுப்பினர் ஹாரி ஆகெர்மென் அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் இந்தியா ஒரு நல்ல எதிர்காலம் உள்ள நாடு. அந்த நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அதனால் இந்தியாவுடன் அமெரிக்கா நெருக்கமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். மும்பையில் நடந்த தாக்குதல் மாதிரி மேலும் ஒரு தாக்குதல் நடந்தால் அதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த முடியவில்லை என்று அமெரிக்க அரசு கூறக்கூடாது. தீவிரவாதிகளை வளரவிடக்கூடாது என்பதுதான் நமது விருப்பமாகும். தீவிரவாதத்தை உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய குறுகிய நோக்கங்களுக்காகவும் தேவைகளுக்காகவும் செயல்படுபவர்கள். அதனால் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஐ.எஸ்.ஐ.யும் நம்முடன் சேர்ந்து செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ- முகமத் ஆகிய தீவிரவாத இயக்கங்களுடன் ஐ.எஸ்.ஐ. நெருக்கமான உறவு வைத்திருக்கிறது. அதனால் தெற்காசியாவில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தையும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்குவது இந்தியாதான். அதனால் அந்த நாட்டுடன் அமெரிக்கா நெருக்கமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்