முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி பொறியியல் கல்லூரி: முதல்வர் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.6 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாநேற்று (5.9.2012) தலைமைச் செயலகத்தில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் புதிய அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மாறிவரும் காலத்திற்கேற்ப தேவையான திறன்களைப் பெறும் வகையில் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியினை அனைத்து மாணவச் செல்வங்களும் பெறவேண்டும் என்பதே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயர்ந்த நோக்கமாகும்.  தொழில்நுட்பக் கல்வி, தமிழக மாணவச் செல்வங்களை எளிதில் சென்றடைய வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக உள்ளது.  கிராமப்புற ஏழை, எளிய, நடுத்தர மாணவ, மாணவிகள் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே தொழிற்கல்வி பயில பொறியியல் கல்லூரிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் புதிய அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். 

இக்கல்லூரியில், முதலாம் ஆண்டு அமைப்பியல் பிரிவு, இயந்திரவியல் பிரிவு, மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவு, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பிரிவு மற்றும் கணினி அறிவியல் பிரிவு ஆகிய பிரிவுகளில் தலா 60 மாணவ, மாணவிகள் என மொத்தம் 300 மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள். இப்புதிய பொறியியல் கல்லூரிக்குத் தேவையான கட்டடங்கள், உபகரணங்கள், ஆசிரியர் நியமனம், மாணவ, மாணவியர் விடுதி, நூலகம், ஆய்வுக் கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 93 கோடியே 64 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கடலூர் மாவட்டம் ​ பண்ருட்டி, தஞ்சாவூர் மாவட்டம் ​ ராஜாமடம், கன்னியாகுமரி மாவட்டம் ​ கோணம் ஆகிய இடங்களில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள் மற்றும் கோயம்புத்தூர், அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றிற்கு 60 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், பெரம்பலூர் மாவட்டம் ​ கீழக்கனவாய், மதுரை மாவட்டம் ​ அம்பலக்காரன்பட்டி, தேனி மாவட்டம் ​ கோட்டூர், திருவாரூர் மாவட்டம் ​ கொற்கை, கிருஷ்ணகிரி மாவட்டம் ​ கிருஷ்ணகிரி ஆகிய  இடங்களில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 29 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், சென்னை மாவட்டத்தில் ​ மாநிலக் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி மற்றும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி; கடலூர் மாவட்டம் ​ அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம் ​ அரசு கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி மாவட்டம்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பர்கூர் அரசு கலைக் கல்லூரி (மகளிர்), அரியலூர் மாவட்டம் ​ அரசு கலைக் கல்லூரி; நாமக்கல் மாவட்டம்  நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக் கல்லூரி (மகளிர்) மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, இராமநாதபுரம் மாவட்டம் ​ அரசு கலைக் கல்லூரி (மகளிர்), சிவகங்கை மாவட்டம்  அரசு கலைக் கல்லூரி (மகளிர்), கோயம்புத்தூர் மாவட்டம் ​ அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி (மகளிர்), தஞ்சாவூர் மாவட்டம் ​  ஒரத்தநாடு அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி,   ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரி (மகளிர்) மற்றும் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 12 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், நூலகங்கள், மாணவியர் விடுதி உள்ளிட்ட புதிய கட்டடங்கள், 

சிவகங்கை மாவட்டம் ​ காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், சேலம் மாவட்டம் ​ பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி மாவட்டம் ​ பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் 8 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் என மொத்தம் 110 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நிதியமைச்சர்,  உயர்கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony