முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் வெடிமருந்து குடோன்களில் சோதனை

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

திருமங்கலம், செப். 6 - திருமங்கலம் பகுதியில் உள்ள வெடி மருந்து குடோன்கள் மற்றும் குவாரிகளில் மதுரை மாவட்ட வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குவாரிகளில் இருந்து கனிமங்களை எடுத்து செல்ல சீட்டுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் முடக்கப்பட்டுள்ள குவாரிகள் இயங்குகின்ற வெடிமருந்து குடோன்களில் இருப்பு சரிவர வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை நடத்திட மதுரை மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். 

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் எஸ்.ஐ. சந்திரமோகன் தலைமையில் போலீசார் சுப்பிரமணி, குணசேகரன், செந்தில்குமார், ஜெயக்குமார் ஆகியோர் மோப்ப நாய் டிக்சி உதவியுடன் திருமங்கலம் பகுதியில் உள்ள பெரியபொக்கம்பட்டி வெடிமருந்து குடோன், ஆலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் குவாரிகள், பேரையூர் தாலுகாவில் உள்ள கல்லுப்பட்டி குவாரிகள் மற்றும் வெடிமருந்து குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். நீண்ட நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில் எதுவும் சிக்கவில்லை. எனினும் அடிக்கடி சோதனை நடைபெறும் என்று போலீசார் எச்சரித்து சென்றனர். வெடிகுண்டு செயலிழப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனை திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony