முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரிசுரங்க முறைகேடு: பா.ஜ.கஆளும் மாநில முதல்வர்கள் ராஜினாமா செய்யவேண்டும்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, செப். - 10 - நிலக்கரி சுரங்க முறைகேடு குற்றச்சாட்டில் பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல் வலியுறுத்தி உள்ளார்.  நிலக்கரி சுரங்க முறைகேட்டில் அத்துறைக்கு பொறுப்பாக இருந்த பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டுமென பா.ஜ.க பிடிவாதமாக உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கபில்சிபல் இந்த விவகாரம் தொடர்பாக கூறியதாவது,  நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யாததால்தான் முறைகேடு நடந்தது என்று பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் உண்மையிலேயே நிலக்கரி சுரங்கத்தை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியதே பாஜ.க ஆளும் மாநில முதல்வர்கள்தான். எனவே பா.ஜ.க முதலில் தங்கள் முதல்வர்களை ராஜினாமா செய்யுமாறு கூற வேண்டும். ஏனெனில் ஏல முறையை எதிர்த்ததே பா.ஜ.க. மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த மாநில முதல்வர்கள்தான். எனவே இந்த விவகாரத்துக்கு அவர்கள்தான் பொறுப்பு. சுரங்கங்கள், கனிம வளங்கள் கட்டுப்பாட்டு சட்டப்படி இது தொடர்பான ஏலங்களை நடத்த சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத்தான் அதிகாரம் உள்ளதே தவிர மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. அப்படியிருக்கும் போது ஏலம் நடத்தலாம் என்று மத்திய அரசு கூறிய போது மாநில அரசுகள் முக்கியமாக பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ள மாநில அரசுகள்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்