முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகனுக்கு ரூ. 58 லட்சம் அசையும் சொத்துக்கள்

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ராம்புர்ஹாட், ஏப்.- 7 - மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகன் அப்ஜித் முகர்ஜிக்கு ரூ. 58 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாக அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் பீர்பூம் மாவட்டம் நல்ஹாத்தி தொகுதியில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகன் அப்ஜித் முகர்ஜி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.  இதற்கான வேட்பு மனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தனக்கு ரூ. 58 லட்சத்து 22 ஆயிரத்து 890 மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் நகை மற்றும் ஆபரணங்களின் மதிப்பு மட்டும் ரூ. 31,54,025 ஆகும்.

ஒரு மாருதி 800 கார், மகிந்திரா ஆர்மி ஜீப், ஒரு மோட்டார்  சைக்கிள், வங்கி டெபாசிட்டுகள், பங்கு  மார்க்கெட்டில் முதலீடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரது மனைவி சித்ரலேகா முகர்ஜிக்கு ரூ.90 லட்சத்து 50 ஆயிரத்து 353 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளன. தங்க மற்றும் வைர ஆபரணங்கள் ரூ.50 லட்சத்து 74 ஆயிரத்து 120 என்றும் கூறப்பட்டுள்ளது. டொயோட்டா கரோலா கார் (இது 2009 ல் வாங்கப்பட்டது), மற்றும் வங்கி டெபாசிட்டுகள் உள்ளன என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் என்ற ஆடம்பர பகுதியில் அப்ஜித் முகர்ஜிக்கு ஒரு வீடும், விவசாய நிலம் உள்ளிட்ட 1 கோடியே 73 லட்சத்து 76 ஆயிரத்து 318 மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளன.

இவரது மனைவிக்கு ரூ.1 கோடியே 70 லட்சத்து 87 ஆயிரத்து 930 மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன. இதில் கிரேட்டர்  கைலாஷ் பகுதியிலும் ஒரு வீடு  இருக்கிறது.

இவரது மனைவிக்கு ரூ.57 லட்சத்து 90 ஆயிரம் கடன்கள் உள்ளன என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்