முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. செப்.- 11 - கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வருகிற வியாழக்கிழமை  பிரதமர் மன்மோகன்  சிங்  அடிக்கல் நாட்டுகிறார். கேரள மாநிலம் கொச்சியில்  25. 6 கி.மீ. நீளத்திற்கு  ரூ. 5,181.79 கோடி செலவில் மெட்ரோ ரயில்  திட்டத்தை  செயல்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளது.  நீண்ட காலமாக  எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த  திட்டத்திற்கான நிதியை  மத்திய அரசும் மாநில அரசும் வழங்குகின்றன. இந்த திட்டத்திற்காக  அடிக்கல் நாட்டு விழா  வருகிற வியாழக்கிழமை  கொச்சியில் நடைபெற உள்ளது. அப்போது  இந்த திட்டத்திற்கான  அடிக்கல்லை  பிரதமர் மன்மோகன் சிங்  நாட்டுவித்து  உரை நிகழ்த்துகிறார். இந்த திட்டம் 4 ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆழ்வாய் முதல் பெட்டா என்ற இடம் வரை இயக்கப்பட இருக்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் காங்கிரீட் மேடையில்  அமைக்கப்படும். இந்த திட்டத்திற்கு  மத்திய அரசு ரூ.  1002.23 கோடியும் கேரள மாநில அரசு ரூ. 1772.23 கோடியும் நிதி உதவி அளிக்கும். எஞ்சியுள்ள தொகை  கடன்கள் மூலமாக நிறைவேற்றப்படும். இரண்டு நாள் பயணமாக கொச்சி வரும் பிரதமர் மன்மோகன் சிங் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள  கேரள கலாமண்டலம்  கலை மற்றும் கலாச்சார நிகர் நிலை பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்.  இது மட்டுமல்லாமல் மேலும்  பல நிகழ்ச்சிகளிலும்  அவர் பங்கேற்பார் என்றும்  அதிகார வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்