முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாசுக்கு டெல்லியில் பாரம்பரிய வரவேற்பு

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. செப்.- 12 - பாலஸ்தீன ஜனாதிபதி மெஹ்மூத் அப்பாசுக்கு  டெல்லி ஜனாதிபதி மாளிகையில்  பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பாலஸ்தீன ஜனாதிபதி  மெஹ்மூத் அப்பாஸ் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருக்கு  ஜனாதிபதி மாளிகையில்  பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி  அவரை உற்சாகத்துடன் வரவேற்றார். ஜனாதிபதி மாளிகையில்  அளிக்கப்பட்ட முப்படை ராணு வ அணிவகுப்பு மரியாதையையும் அப்பாஸ் ஏற்றுக்கொண்டார். அப்பாசுடன்   ஒரு உயர் மட்டக்குழுவும் இந்தியா  வந்துள்ளது. அப்பாசும் அவரது உயர் மட்டக்குழுவினரும்  பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து  முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.  அப்போது  இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை  மேலும் வலுப்படுத்துவது  என்பது தொடர்பான  ஒப்பந்தத்தில்  இரு நாட்டு  தலைவர்களும்  கையெழுத்திட உள்ளனர். இரு நாட்டு உறவுகள்  பிராந்திய பிரச்சினைகள், சர்வதேச பிரச்சினைகள் உள்ளிட்ட  பல்வேறு அம்சங்கள் குறித்தும்  இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு  நிகழ்ச்சிக்கு பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய  அப்பாஸ்,  நாங்கள் இந்தியாவுக்கு வரும் போதெல்லாம், எங்களுக்கு  சிறப்பான  வரவேற்பு  கொடுக்கப்படுகிறது. அதே போல  நாங்கள்  கேட்பதையெல்லாம்  இந்தியா  எங்களுக்கு அளித்து வருகிறது. அந்த  அளவுக்கு  இரு நாடுகளும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன . நீண்ட காலமாகவே  இரு நாடுகளும் நெருக்கமான நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன . அனைத்து அம்சங்களிலும்  பாலஸ்தீனத்திற்கு  இந்தியா ஆதரவு அளித்து  வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்