முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை விமர்சனம் ``மன்னாரு''

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2012      சினிமா
Image Unavailable

நாயகி ஸ்வாதி, சதீஷ் காதலர்கள். ஸ்வாதியை அந்த ஊர் பெரிய மனிதர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இவரின் பிடியிலிருந்து தப்பிக்க காதலர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த திருமணத்திற்கு சாட்சி கையெழுத்துப் போடுகிறார் அப்பாவியான சதீஷ் நண்பர் அப்புக்குட்டி. (மன்னாரு). திருமணம் முடிந்து வெளியே வரும்போது ஊர்பெரியவரின் கும்பல் பார்த்துவிடுகிறார்கள். ஸ்வாதி - சதீசை விரட்டுகிறார்கள். அப்போது ஸ்வாதியை அப்புக்குட்டி கையில் பிடித்துக் கொடுத்து பஸ்சில் ஏறி தப்பித்து போகும்படி கூறிவிட்டு கணவரான சதீஷ் அந்த கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார். தன் சொந்த ஊரில் அரைகிறுக்கன் என்று பெயர் எடுத்து  பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு ஊரைவிட்டு வெளியே வந்த அப்புக்குட்டி அழகு தேவதையான ஸ்வாதியோடு மீண்டும் அதே ஊருக்கு வருகிறார். ஊரே வியப்பாக பார்க்கிறது. இந்த சூழலில் தன் மாமன் அப்புக்குட்டியைதான் திருமணம் செய்து கொள்வேன், இல்லையென்றால் இறந்துவிடுவேன் என்று வைராக்கியமாக ஊரில் காத்திருக்கும் வைஷாலி, அப்புக்குட்டி கோலத்தை கண்டு அதிர்ச்சிடைகிறார். அதே நேரத்தில் அந்த ஊர்காரர்கள் ஸ்வாதி - அப்புக்குட்டியை புருஷன், பொண்டாட்டி என காது கேட்க பேசுவதை மறுக்காமல் இருப்பதோடு காதலனுக்கு கழுத்தை நீட்டிவிட்டு அப்புக்குட்டிதான் என் புருஷன் என்கிறார் ஸ்வாதி. இந்த சிக்கலுக்கு தீர்வு என்ன என்பது க்ளைமாக்ஸ். கதையின் நாயகன் அப்புக்குட்டி (மன்னாரு) கதையோடு ஒன்றிபோய் நடித்திருக்கிறார். உதாரணத்துக்கு ஊர் பெரியவர் மிரட்டலிலிருந்து தப்பித்து கொடைக்கானல் பேருந்து நிலையத்தில்  இரவு நேரமாகி போனதால் ஓட்டலில் தங்க ரூம் கேட்கும்போது நண்பனின் மனைவியை தன் மனைவி என்று சொல்ல தயங்குவது, ஓட்டல்காரர் ஸ்வாதியை தப்பாக பேசும்போதும் வேகம் கொண்டு தாக்குவது, ஊர்க்காரர்கள் ஸ்வாதியை தப்பாக பேசும்போது, தன் அப்பா தவசி அப்புக்குட்டியை அடித்து துவம்சம் செய்யும்போது, தனிமையில் தன்நிலை அறிந்து   அழும் காட்சிகளில் மனதில் இடம் பிடிக்கிறார். இப்படி பல இடங்களில் அப்புக்குட்டி நடிப்பு சபாஷ். நாயகி கதைக்கு பொருத்தமான தேர்வு. சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு நடிக்கும் முகபாவனைகள் அருமை. இரண்டாவது நாயகியாக கிராமத்து வேடத்தில் நடித்திருக்கும் வைஷாலி மாமனுக்காக உருகுவது, அடிக்கடி தற்கொலை முயற்சி செய்வது, ஸ்வாதியுடன் எதிர்த்து  வசனம் பேசும் காட்சிகளில் குறைசொல்ல இடமில்லை. இவர்களுடன் சுதீஷ், தவசி, கோபால், ஊர் பஞ்சாயத்து தலைவராக வரும் தம்பி ராமையா, ஜெய்சூர்யகாந்த், என்னுயிர் தோழன் ரமா என பலரும் கேரக்டருக்குள் நின்று நடித்திருக்கிறார்கள். அகுஅஜமல் தனது ஒளிப்பதிவால் கொடைக்கானல் மற்றும் மலை சார்ந்த பகுதிகளை படம் பிடித்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். உதயன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்கலாம். எடிட்டிங் பிரேம். கதை, திரைக்கதை,  வசனம், இயக்கம் எஸ்.ஜெய்சங்கர். மண்ணின் வாசனையோடு இயற்கை எழிலில் வாழ்ந்திருக்கிறார் மன்னாரு.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony