முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேலி சித்திரக்காரர் அசீம் கைதுக்கு எல்.கே.அத்வானி கடும்எதிர்ப்பு

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.- 13 - பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி கைது செய்யப்பட்டதற்கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது மாதிரியான சூழ்நிலை நிலவுகிறது என்றும் அவர் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.  நாட்டின் தேசிய சின்னங்கள் குறித்து கேலி சித்திரம் வரைந்த அசீம் திரிவேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளார். அசீம் திரிவேதி கைது செய்யப்பட்டதற்கு எல்.கே. அத்வானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எல்.கே.அத்வானி அவரது இணையதளத்தில் வெளியிட்டுளக்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி கைது செய்யப்பட்டிருப்பது நாட்டில் கடந்த 1975-77-ம் ஆண்டுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது நிலவிய சூழ்நிலை உருவாகியுள்ளது, இதற்கு காரணம் மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசானது பலதுறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. அதனால் காங்கிரஸ் மனப்போக்கு சர்வாதிகார போக்காக மாறியுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளாகிவிட்டது. கடந்த 1975 முதல் 1977-ம் ஆண்டு வரை இருந்த சூழ்நிலை மாதிரி தற்போதும் மனித சுதந்திரம், சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடமுடியாமல் நசுக்கப்பட்டு வருகிறது. அரசியல் கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதிக்கு ஏற்பட்டுள்ளதை  பார்க்கும்போது மோசமான சூழ்நிலை உருவாகி இருப்பதாக தெரிகிறது. நாட்டில் அவரசநிலை இருந்தபோது கார்டூனிஸ்ட் அபு ஆபிகாமுக்கு ஏற்பட்ட நிலைதான் தற்போது அசீம் திரிவேதிக்கு ஏற்பட்டுள்ளது. அவசரநிலை இருந்தபோது மத்திய அரசானது சர்வாதிகாரப்போக்கில் அதிக அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டது. அதோபோல்தான் தற்போதும் ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசும் தேவைக்கு அதிகமான அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டு உள்ளது. இதற்கு காரணம் இந்த அரசானது னைத்து துறைகளிலும் தோல்வி அடைந்திருப்பதால் விரக்தி அடைந்திருப்பதுதான். இவ்வாறு அந்த இணையதளத்தில் எல்.கே. அத்வானி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்