முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி மலைக்கோயிலில் நாள்முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்றுதுவக்கம்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

பழனி, செப். - 13 - பழனி முருகன் மலைக் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. தமிழக கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டம் 2002 மார்ச் 23-​ம் தேதி தொடங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை, அப்போது மயிலாப்nullர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் 360 கோயில்களில் நடைமுறையில் இருந்தது. இதன்பின், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அன்னதானத் திட்டம் பெரிய அளவுக்கு விரிவுபடுத்தப்படவில்லை. இரண்டு கோயில்களுக்கு மட்டுமே நீnullட்டிப்புச் செய்யப்பட்டது. 2011-​ல் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும், 106 கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த நிதியாண்டுடன் சேர்த்து தமிழகத்தில் 468 கோயில்களில் அன்னதானத் திட்டம் அமலில் உள்ளது. இதன்மூலம், நாளொன்றுக்கு 31 ஆயிரத்து 575 பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். இத் திட்டத்துக்காக தினமும் ரூ.6.32 லட்சம் செலவிடப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் மேலும் 50 கோயில்களில் திட்டத்தை நீnullட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 518 கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
தமிழகத்தில் அன்னதானத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முக்கியமான இரண்டு கோயில்களில் 14 மணி நேர அன்னதானத் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலதண்டாயுதபாணி ஆகிய இரு கோயில்களிலும் இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், காலை 8 மணிக்கு சிற்றுண்டியுடன் அன்னதானத் திட்டம் தொடங்குகிறது. நண்பகலில் அறுசுவை உணவு பரிமாறப்படுகிறது. இது, இரவு 10 மணி வரை நடைபெறும். அதன்படி, 14 மணிநேரத்துக்கு அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருப்பதி கோயிலில் மட்டுமே இத்தகைய அன்னதானத் திட்ட முறை செயல்பாட்டில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் இரண்டு கோயில்களில் 14 மணி நேரத்துக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.இந்த அன்னதானத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வரும் 13-​ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பழனி முருகன் மலைக் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையொட்டி பழனி கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டனர். இதையடுத்து அன்னதானம் வழங்குவதற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் தயார் நிலையில் உள்ளது. புதிய கேஸ் அடுப்புகள், நீராவி அடுப்புகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது.
பழனி முருகன் மலைக் கோயிலில் தற்போது தினசரி 800 முதல் 1,500 பக்தர்கள் வரை அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் தொடங்கினால் தினசரி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் அன்னதான மடத்தில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படும். இதன்படி சாதாரண நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும், திருவிழாக் காலங்களில் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பக்தர்கள் வரை அன்னதானம் வழங்கப்படவுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 400 பக்தர்கள் அமர்ந்து சாப்பிடுமாறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்