முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமிற்கு எதிரான திரைப்படத்தை எதிர்த்து ஸ்லீம்நாடுகளில் தொடரும் வன்முறை

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

கார்டோம்,செப்.- 16 - இஸ்லாம் மதத்திற்கு எதிராக திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் நாடுகளில் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாம் மதத்தை கிண்டல் செய்யும் வகையில் அமெரிக்காவில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எகிப்து நாட்டில் முதன்முதலாக முஸ்லீம்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையொட்டி தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த பல மணி நேரத்திற்குள் லிபியாவிலும் முஸ்லீம்கள் போராட்டத்தில் குதித்தனர். அமெரிக்க தூதரகத்தை தாக்கினர். அங்கிருந்த அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். மேலும் 3 பேரையும் சுட்டுக்கொன்றனர். இந்த கலவரம் இதர முஸ்லீம் நாடுகளுக்கும் பரவியுள்ளது. பள்ளிகள், ரெஸ்ட்டாரண்டகளும் தாக்கப்பட்டு வருகின்றன. எகிப்தில் நடந்த வரும் போராட்டத்தையொட்டி வன்முறை சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைத்தவிர சூடான்,லெபனான், துனிசியா போன்ற முஸ்லீம் நாடுகளிலும் அமெரிக்காவுக்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். முஸ்லீம் நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்படுவதை தடுக்க உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் கலவரக்காரர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் லிபியா மற்றும் ஏமன் நாடுகளுக்கு அமெரிக்க கடற்படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் இதை அமெரிக்கா மறுத்து உள்ளது. மெளரிடானியா, இந்தோனேஷியா, நைஜீரியா ஆகிய நாடுகளிலும் முஸ்லீம்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அந்த நாடுகளை சேர்ந்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். துனிசியாவில் ஒரு அமெரிக்க பள்ளியை தீ வைத்து கொளுத்த கலவரக்காரர்கள் முயற்சி செய்தனர். அவர்களை போலீசாரும் ராணுவத்தினரும் தடுத்து நிறுத்திவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago