முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதிக்கு ஆண்டாள் மாலை கொண்டு செல்லப்பட்டது

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி, செப்.21 - ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை புரட்டாசி பிரம்மோற்சவ கருடசேவையின்போது திருமலை திருவேங்கடமுடையான் அணிந்து பக்தர்களுக்கு அருள் வழங்கிட தமிழகத்து ஸ்ரீவில்லி ஆண்டாள் சூடி களைந்த வண்ண மலர்மாலை, கைகிளி, பட்டு வஸ்திரம் ஆகியவற்றை கோவில் அர்ச்சகர்களால் திருப்பதிக்கு காரில் கொண்டு சென்றனர்.

விழாவில் முக்கிய பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிகளைந்த மாலை,பட்டு வஸ்திரம், இலையால் செய்யப்பட்ட கைகிளி ஆகியன மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் அணியவும், ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை புரட்டாசி பிரம்மோற்சவத்திற்கு 5ம் நாள் கருடசேரையின்போது மூலவரான வெங்கடேசப்பெருமாளும் மோகினி அவதாரத்தில் உற்சவ மூர்த்தியும் ஆண்டாளின் மாலை,புடவை, கிளை ஆகியவற்றை அணிந்து அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். பல நூறு வருடங்களாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி நேற்று ஸ்ரீவில்லி நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து ஆண்டாளுக்கும் - ரங்கமன்னாருக்கும் காலை சிறப்பு திருமஞ்சனம், விசேஷ அலங்காரம் நடத்தப்பட்டது. 

இதனை தொடர்ந்து 7 அடி நீளமுள்ள பல வண்ணமலர்களால் சிறப்பாக கட்டப்பட்ட மலர்மாலை, பட்டுபரிவட்டம் கைகிளி ஆகியன ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முத்துபட்டர், பாலாஜி ஆகியோர் பூஜைகளை முத்துபட்டர்,பாலாஜி ஆகியோர் நடத்தினர்.

திருப்பதி,திருமலைக்கு கொண்டு செல்லும் கிச்சப்பன்ஸ்தானீகம் ரமேஸ் என்ற ரங்கராஜன்  ஆகியோர் மாடவீதிகள் வழியே மேள,தாளம் முழங்கிட ஊர்வலம் வந்து திருப்பதி திருமலைக்கு கார் மூலம் எடுத்து கொண்டு சென்றனர். 

விழாவில் ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா, தக்கார் ரவிச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் சுப்பிரமணியம், நாச்சியார் டிரஸ்ட் ரங்கசாமி, குருசாமிநாயுடு, ஆன்மீகசொற்பொழிவாளர் ராஜாராம், மணியம் ஸ்ரீராமன், வேதபிரான் சுதர்சன பட்டர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆண்டாள் மாலை திருப்பதிக்கு செல்லும் வைபவம் ராஜபாளையம் ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜாவின் ஏற்பாட்டின் படி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன் கோவில் செயல் அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் கோவில் அலுவலர்களும், திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்